முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 08

0

உலக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை தினம்

  • முதலாம் உலக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வீரர் வால்டர் இயோ என்பவருக்கு முதல் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
  • இவருக்கு 1917ம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று சர் ஹெரால்டு கில்லீஸ் என்கிற மருத்துவர் முகச் சிகிச்சை செய்தார். இதுவே உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி ஆகும்.
  • அதனால் ஹெரால்டு கில்லீஸ் என்பவரை பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை என்கின்றனர்.

உலக பூனை தினம்

© Marie-Lan Nguyen / Wikimedia Commons
  • பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.
  • மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்கின்றன. சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும் கொண்டவை. அதிக விளையாட்டுத்திறன் கொண்டுள்ளது.
  • பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது.
  • உலக பூனை தினம் முதன்முதலாக 2014ம் ஆண்டில் துவங்கியது.

சிவெத்லானா சவீத்சுக்கயா பிறந்த தினம்

பிறப்பு:

  • ஆகஸ்ட் 8, 1948ல் ரஷ்யா நாட்டில் பிறந்தார்
Kremlin.ru [CC BY 3.0 (https://creativecommons.org/licenses/by/3.0) or CC BY 4.0 (https://creativecommons.org/licenses/by/4.0)], via Wikimedia Commons

சிறப்பு:

  • சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா என்பவர் முன்னாள் சோவியத் விண்வெளி வீராங்கனை ஆவார்.
  • இவர் சோயூசு டி-7 விண்கலத்தில் 1982ல் முதற் தடவையாகப் பயணித்தார். இவரே விண்ணுக்குச் சென்ற இரண்டாவது பெண்ணாவார்.
  • சல்யூத் 7 விண்வெளி நிலையத்தில் 1984 சூலை 25 இல் விண்ணில் நடந்து சாதனை படைத்தார்.
  • இவரே விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார்.
  • இவர் விண்வெளி நிலையத்துக்கு வெளியே 3 மணி 35 நிமிடங்கள் நேரம் நின்றிருந்தார்.
  • இரண்டு தடவைகள் “சோவியத் வீரர்” என்ற நாட்டின் உயர் விருதினையும் பெற்றார்.
  • சவீத்ஸ்கயா விண்வெளித் திட்டப் பணிகளில் இருந்து 1993ல் ஓய்வு பெற்றார்.
  • ரஷ்ய கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார். தொடர்ந்து நான்கு தடவைகள் இவர் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

விண்பயண நேரம்: 19நாள் 17மணி 06நிமிடம்

உலிமிரி இராமலிங்கசுவாமி பிறந்த தினம்

பிறப்பு:

  • ஆகஸ்டு  8, 1921ல் ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார்.

சிறப்பு:

  • ஓர் இந்திய மருத்துவ அறிஞர் ஆவார். ஊட்டச்சத்து இயலில் இவர் செய்த முன்னோடி ஆய்வுகளின் காரணமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய அறிவியல் கழகம், இலண்டன் அரச கழகம் ஆகிய அமைப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
  • புதுடெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநராகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.

விருதுகள்:

  • பத்ம ஸ்ரீ  – 1969
  • பத்ம பூசண்
  • பத்ம விபூசண்

இறப்பு:

  • மே 28, 2001ல் இறந்தார்.

நிகழ்வுகள்

  • 1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனாக முடிசூடினான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது.
  • 1908 – வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் “லெ மான்ஸ்” என்ற இடத்தில் மேற்கொண்டார்.
  • 1942 – இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 2007 – நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!