Reliance Jio வழங்கும் இலவச Disney + Hotstar சலுகை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
தற்போது டிஸ்னி + ஹாட் ஸ்டார் பயனாளர்கள் அதிகமாகி வருவதன் காரணமாக ஜியோ நிறுவனத்தில் ரீசார்ஜ் திட்டங்களுடன் இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டங்கள் வழங்கப்படுகிறது. இது குறித்த விபரங்களை இப்பதிவில் காணலாம்.
ஜியோ:
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி வகித்து வருகிறது ஜியோ நிறுவனம். இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்பு ஆஃபர்களை வழங்கி வருகிறது. 28 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கான ஆஃபர்களையும் வழங்குகிறது. ஜியோ வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிகப்படியான OTT நன்மைகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ.499, ரூ.888, ரூ.2,599 போன்ற திட்டங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.
DC vs RR Live Score – அரைசதத்தை நழுவ விட்ட ஷ்ரேயஸ்! சிக்கலில் டெல்லி கேபிட்டல்ஸ் !
தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் பயனாளர்கள் அதிகமாகி வருகின்றனர். எனவே பயனர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் கிரிக்கெட் பேக் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. ரூ.499, ரூ.666, ரூ.888 மற்றும் ரூ.2,599 ஆகிய திட்டங்கள் மூலம் பயனர்கள் இந்த சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.499 திட்டம்:
ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த ரூ.499 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 6 ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது. 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் முதலியன வழங்கப்படுகின்றன. அதனுடன் JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட Jio செயலிகள் வழங்கப்படுகிறது. முக்கியமாக ஒரு வருடத்திற்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் அணுக்களும் வழங்கப்பட்டு வருகிறது.
Join Our TNPSC Coaching Center
ரூ.666 திட்டம்:
ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த ரூ.666 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் முதலியன வழங்கப்படுகின்றன. Jio செயலிகளுக்கான அணுக்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டாரும் வழங்கப்படுகிறது.
ரூ.888 திட்டம்:
ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த ரூ .888 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 5 ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது. 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் முதலியன வழங்கப்படுகின்றன. Jio செயலிகளுக்கான அணுக்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டாரும் வழங்கப்படுகிறது.
ரூ.2,599 திட்டம்:
ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த ரூ .2,599 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் முதலியன வழங்கப்படுகின்றன. மேலும் 365 நாட்களுக்கு ஜியோ ஆப் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல் கிடைக்கும்.