திருமண கோலத்தில் ‘பாரதி கண்ணம்மா’ பரினா கர்ப்பகால போட்டோஷூட் – ரசிகர்கள் வாழ்த்து!
“பாரதி கண்ணம்மா” சீரியலின் மூலமாக தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தினை உருவாக்கி கொண்ட நடிகை பரினா தற்போது லேட்டஸ்டாக ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை பரினா
தற்போது வரை தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஒரு சீரியல் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தான். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினாவிற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்ததால் பலர் அவரை வெறுத்தனர். ஆனால், அவர் தனது தேர்ந்த நடிப்பின் காரணமாக தனக்கு என்று தனி அடையாளத்தினை ஏற்படுத்தி கொண்டார் என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் நடிகை பரினா தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார்.
நாகசைதன்யாவுடன் விவாகரத்து குறித்து கேட்ட நிருபர் – சமந்தா கொடுத்த பதிலடி!
மற்ற நடிகைகள் அனைவரும் இந்த சமயத்தில் வித விதமாக போட்டோஷூட் நடத்தி அதனை பதிவிட்டு வருவது வழக்கம் தான். அதே போலவே பரினாவும் பல விதமான போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சில அபாயகரமான போட்டோஷூட்டும் நடத்தி வருகிறார். இது குறித்து ரசிகர்கள் பலர் அவருக்கு அறிவுரை கூறினாலும் அதனை பரினா ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
‘செம்பருத்தி’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த அகிலாண்டேஸ்வரி – ரசிகர்கள் உற்சாகம்!
தற்போது அழகாக ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார். பட்டு சேலை அணிந்து பெண்ணுக்கே உரிய நாணத்துடன் அழகாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. லைக்குகளும் இந்த புகைப்படங்களுக்கு குவிந்து வருகின்றது.