‘செம்பருத்தி’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த அகிலாண்டேஸ்வரி – ரசிகர்கள் உற்சாகம்!

0
'செம்பருத்தி' சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த அகிலாண்டேஸ்வரி - ரசிகர்கள் உற்சாகம்! 
'செம்பருத்தி' சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த அகிலாண்டேஸ்வரி - ரசிகர்கள் உற்சாகம்! 
‘செம்பருத்தி’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த அகிலாண்டேஸ்வரி – ரசிகர்கள் உற்சாகம்! 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “செம்பருத்தி” சீரியலில் நடித்து வரும் நடிகை ப்ரியா ராமன் தற்போது ஜாலியாக தனது செட்டில் இருப்பவர்களுடன் ரீல்ஸ் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

செம்பருத்தி சீரியல்

இன்று பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பது சீரியல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தான். அந்த வகையில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த சீரியல் என்றால் அது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “செம்பருத்தி” சீரியல் தான். இந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியா ராமன் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ‘வள்ளி’ என்ற திரைப்படத்தின் மூலமாக தான் இவர் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என்று பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல் கதறி அழும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

மார்க்கெட் சரிய தொடங்கியதும் அவர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘துர்க்கா ஸ்ரீ’ என்ற சீரியல் தான் இவரது முதல் சீரியல். பின்னர் தான் இவருக்கு செம்பருத்தி சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் திமிர்த்தனமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இவர் இந்த சீரியலில் இருந்து விலக போகிறார் என்பது போன்ற செய்திகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவி வந்தது.

சந்தியா, சரவணனின் வருகையை கண்டு மகிழ்ச்சி அடையும் குடும்பத்தினர் – “ராஜா ராணி 2” ப்ரோமோ!

ஆனால், அது வெறும் வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டது. இப்படியாக இருக்க, பிரியா ராமன் தனது செட்டில் உள்ளவர்களுடன் ஜாலியாக ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த ரீல்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டெரராக இருப்பவரா இப்படி ஜாலியாக ரீல்ஸ் செய்து வருகிறார் என்று ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here