விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ – ‘டூ டூ டூ’ பாடல் வெளியீடு!
தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘டூ டூ டூ’ இன்று வெளியாகியுள்ளது.
பாடல் வெளியீடு:
தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தினை லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாகும். முதலில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரவுடி தான்’ படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பாரதி கண்ணம்மா – TRP ரேட்டிங்!
அதனால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. மேலும், படத்தின் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘ரெண்டு காதல்’ கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய லட்சுமி அம்மா – மனம் திறந்த நடிகை ஷீலா!
காதல் கதை களம் நிறைந்த இந்த படத்தில் சமந்தாவும் இணைத்துள்ளார். விஜய் சேதுபதியும், சமந்தாவும் இணைவது இதுவே முதல் முறையாகும். இந்த படத்தின் ஒரு காட்சி படமாக்குவது சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இந்த நிலையில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளையொட்டி ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இரண்டாவது பாடலானா ‘டூ டூ டூ’ பாடல் இன்று மதியம் 2.22 மணிக்கு வெளியாகி உள்ளது.