TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2021 இன்று அறிவிப்பு? டிசம்பரில் தேர்வு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் இந்த ஆண்டுக்கான குரூப் IV சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான அட்டவணை மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா தொற்று சூழலில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததான TNPSC தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் TNPSC தேர்வுகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), இம்மாதம் வெளியிடும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன் படி tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வருடாந்திர தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் எனவும், தேர்வுகள் டிசம்பர் மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ‘கப்பலோட்டிய தமிழன்’ விருது – முதல்வர் அறிவிப்பு!
இருப்பினும் தற்போது வரை, TNPSC குரூப் IV தேர்வுக்கான அறிவிப்புகள் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு நடத்தும் TNPSC குரூப் IV தேர்வுகளை எழுதுவதற்கு, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மொழி குறித்த அறிவு இருக்க வேண்டும். இந்த TNPSC குரூப் IV தேர்வு, இரண்டு செயல்முறைகளை உள்ளடக்கியது. அதன் படி, விண்ணப்பதாரர்கள் முதலில் எழுத்துத் தேர்வுகளையும், பின்னர் ஆலோசனை மற்றும் ஆவண சரிபார்ப்பு தேர்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இந்த எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில், தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். அதில் தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஆலோசனை செயல்முறைகள் நடைபெறும். இந்த குரூப் 4 தேர்வின் மூலம் இளநிலை உதவியாளர், VAO, பில் கலெக்டர், கள ஆய்வாளர், தட்டச்சர், வரைவாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளுக்கான, TNPSC குரூப் IV தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. இதன் மூலம் மொத்தம் 6491 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
I really happy this exam I added this exam and pass
விரைவில் வெளியீடுங்கள் group-4,group-2 gruop-2-A
Gorup – 4
Iam 38years completed now can I apply this group 4 exam sir
Yes you can apply if you have completed any degree then you can apply up to 58th age