ரூ.62,000/- சம்பளத்தில் தமிழ்நாடு WAQF வாரியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
Junior Assistant பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு WAQF வாரியத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 27.08.2021 உடன் முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Junior Assistant பதவிக்கு 27 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 37 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிகிரி முடித்த பட்டதாரிகள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் ஆர்வமுள்ளவகர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.