WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய அம்சம் அறிமுகம்!
WhatsApp நிறுவனம் தனது செயலில் அடிக்கடி அப்டேட்களை வழங்கி வருகிறது. தற்போது பயனர்களிடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Disappearing Messages வசதி குறித்து இப்பதிவில் காணலாம்.
WhatsApp அப்டேட்:
WhatsApp நிறுவனமானது அதிகப்படியான பயனர்களைக் கொண்டு இயங்கும் ஒரு செயலியாக இருந்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் சாட் செய்வது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து கொள்ள முடியும். அதிகப்படியான பயனர்களை கொண்டு இயங்குவதால் அடிக்கடி அப்டேட்களை வழங்கி வரும். WhatsApp மூலம் குரூப் கால் செய்யும் வசதியை தொடர்ந்து புகைப்படங்கள் குவாலிட்டி தேர்வு செய்யும் வசதி iOS பயனர்களுக்கு வழங்கப்பட்டது.
மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்காவிட்டால்..! தமிழ்நாடு வணிகர் சங்கம் எச்சரிக்கை!
இதுபோன்ற பல்வேறு புதிய வசதிகளை அடிக்கடி வழங்கிவரும் WhatsApp நிறுவனம் தற்போது பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜ் ஆனது குறிப்பிட்ட நாட்களுக்கு அல்லது நேரத்திற்கு பின்னர் தானாக அழியும் வசதியை அமைத்து கொள்ளலாம். வாட்ஸ்அப்பின் 2.21.9.6 ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில், இந்த புதிய அம்சத்தை காணலாம். அதுபோன்று மறைக்கப்படும் செய்தியானது மறைவதற்கு முன்பு அந்த பயனர் பேக்கப்பை (Backup) ஆக்டிவேட் செய்தால், அதில் சேர்க்கப்படும்.
- பயனர் ஏழு நாட்களில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவில்லை என்றால், அந்த செய்திகள் மறைந்துவிடும். இதுபோன்ற WhatsApp வழங்கியுள்ள புதிய அம்சத்தை செயல்படுத்துவது குறித்த விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- ஆண்ட்ராய்டு அல்லது iOS ஸ்மார்ட்போனில் WhatsApp சேட்டை திறந்து தொடர்பு சேட்டையும் பார்வையிடவும்.
TN Job “FB Group” Join Now
- இந்த தொடர்பின் பெயரை கிளிக் செய்து பின்னர் ‘காணாமல் போகும் செய்திகள்’ (Disappearing Messages) அமைப்பை மீண்டும் க்ளிக் செய்யவும்.
- பின்னர் தொடரும் என்பதை க்ளிக் செய்யவும் மற்றும் On என்பதைத் தேர்ந்தெடுக்கவும். காணாமல் போகும் செய்திகளை அழிக்க விரும்பினால், நீங்கள் இந்த அமைப்பிற்கு திரும்பிச் சென்று தேர்ந்தெடுக்கலாம். குரூப் சாட்டில் காணாமல் போகும் செய்திகளை இயக்க அதே செயல்முறையை நீங்கள் பின்பற்றலாம்.