ஆகஸ்ட் 19 முதல் 23 வரையுள்ள வங்கி விடுமுறை நாட்கள் – முழு விபரம் இதோ!
வழக்கத்தை விட இந்த ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக விடுமுறை தினங்கள் பல்வேறு காரணங்களினால் அறிவிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து 5 விடுமுறை தினங்களின் பட்டியலை இந்த பதிவில் கண்போம்.
வங்கி விடுமுறை:
நாடு முழுவதும் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு விழாக்கள் மற்றும் வார இறுதி நாட்கள் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் அதிக நாட்கள் விடுமுறை தினமாக இந்த ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் மாறுபடுகின்றது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்துவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கவனத்திற்கு – யுஜிசி அறிவுறுத்தல்!
தற்போது ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை தினமாக வருகிறது. பொதுமக்கள் வங்கி பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் வங்கி விடுமுறை நாட்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விடுமுறை பட்டியல்:
- ஆகஸ்ட் 19: திரிபுரா, குஜராத், பஞ்சாப் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் முஹர்ரம் காரணமாக வங்கிகள் மூடப்படும்.
- ஆகஸ்ட் 20: பல தென் மாநிலங்களில் ஓணம் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவதால், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் வங்கிகள் அன்றைய தினம் மூடப்படும்.
TN Job “FB Group” Join Now
- ஆகஸ்ட் 21: திருவோணத்தையொட்டி, கேரளாவில் வங்கிகள் மூடப்படும்.
- ஆகஸ்ட் 22: ரக்ஷா பந்தன் வரும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை காரணமாக வங்கிகள் மூடப்படும்.
- ஆகஸ்ட் 23: ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியையொட்டி, கேரளாவில் வங்கிகள் மீண்டும் மூடப்படும்.