தாலிபான்களை எதிர்த்து களமிறங்கிய 90 நாடுகள் – கூட்டறிக்கை வெளியீடு! ஆப்கனில் பதற்றம்!
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களை தடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று 90 நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளனர்.
நாடுகளின் கூட்டறிக்கை:
ஆப்கானில் அமெரிக்க ராணுவ படைகள் வெளியேற தொடங்கியதை அடுத்து தலிபான் தீவிரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இதனால் ஆப்கான் நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு செல்ல முயன்று வருகின்றனர். அதனால் ஆப்கான் தலைநகரில் உள்ள காபூல் விமான நிலையம் மக்கள் கூட்டத்தால் நிறைந்துள்ளது. விமானங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறி வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சிக்கின்றனர். இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Jio நிறுவனத்தின் குறைந்த விலையில் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் – ரீசார்ஜ் திட்டங்கள்!
இதனால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களும் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இத்தகைய பதற்றமான சூழல் நிலவுவதால் ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரங்களை காலி செய்த பல்வேறு நாடுகள் தங்களுடைய நாட்டினரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் ஆப்கன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று தலிபான்கள் தெரிவித்தனர்.
TN Job “FB
Group” Join Now
அதன் பிறகு உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஆப்கனில் இருந்து வெளியேற நினைப்பவர்கள் வெளியேறலாம், தடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் கூறினர். இது தொடர்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, உக்ரைன் உள்ளிட்ட 90 நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தடுக்க மாட்டோம் என்று கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஆப்கானியர்களுக்கு தலிபான்கள் எந்தவித தடையும் விதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.