இந்திய அஞ்சல் துறையில் ரூ.81000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – டிச.31ம் தேதி கடைசி நாள்!

0
இந்திய அஞ்சல் துறையில் ரூ.81000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - டிச.31ம் தேதி கடைசி நாள்!
இந்திய அஞ்சல் துறையில் ரூ.81000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - டிச.31ம் தேதி கடைசி நாள்!
இந்திய அஞ்சல் துறையில் ரூ.81000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – டிச.31ம் தேதி கடைசி நாள்!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 18 வயது நிரம்பியவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக மேலும் சில தகவல்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு:

கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதை அடுத்து அனைத்து அரசு போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதையடுத்து இந்திய அஞ்சல் துறையில் 50க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணியிடத்தில் அஞ்சல் உதவியாளர், வரிசையாக்க உதவியாளர், தபால்காரர் மற்றும் மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் போன்ற பணிகள் உள்ளது. இதில் 18 வயது நிரம்பியவர் முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை விண்ணப்பிக்க முடியும். இதில் அஞ்சல் உதவியாளர் மற்றும் வரிசையாக்க உதவியாளர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 12ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – விரைவில் பாடத்திட்டம் வெளியீடு!

அத்துடன் வட்டார மொழி அறிவையும் பெற்றிருக்க வேண்டும். மேலும் MTS பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 10 ஆம் தேர்ச்சி பெற்றிருப்பதும் இதோடு வட்டார மொழி அறிவையும் பெற்றிருப்பது அவசியமாகும். இப்பணிக்கு தேவையான விளையாட்டுத் தகுதிகளையும் பெற்றிருப்பது அவசியமாகும். அடுத்ததாக தபால் உதவியாளர் / வரிசைப்படுத்துதல் உதவியாளர் மற்றும் போஸ்ட் மாஸ்டர் போன்ற பணிகளுக்கு 18 வயது முதல் 27 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பல்பணி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள் 18 முதல் 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் ரூ.20000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.4ம் தேதி கடைசி நாள்!

மேலும் அஞ்சல் உதவியாளர் / வரிசையாக்க உதவியாளர் பதவிக்கான மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். இதையடுத்து தபால்காரர் பதவிக்கான மாத சம்பளமாக – 21,700- 69,100 ரூபாயும் மற்றும் மற்ற பதவிகளுக்கான மாத சம்பளமாக MTS – ரூ 18,000 முதல் ரூ 56,000 வரை வழங்கப்படுகிறது. அத்துடன் இப்பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். அதனை Assistant Director (Recruitment) 5th Floor O/O Chief Postmaster General Bihar Circle, Patna-800001 என்ற அஞ்சல் முகவரிக்கு தபால் மூலம் டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!