தமிழக தனியார் நிறுவனங்களில் 80% வேலை தமிழர்களுக்கே – அரசுக்கு முக்கிய கோரிக்கை!

0
தமிழக தனியார் நிறுவனங்களில் 80% வேலை தமிழர்களுக்கே - அரசுக்கு முக்கிய கோரிக்கை!
தமிழக தனியார் நிறுவனங்களில் 80% வேலை தமிழர்களுக்கே - அரசுக்கு முக்கிய கோரிக்கை!
தமிழக தனியார் நிறுவனங்களில் 80% வேலை தமிழர்களுக்கே – அரசுக்கு முக்கிய கோரிக்கை!

தமிழக தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழ் மக்களுக்கு 80% வேலை வழங்கும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் அறிமுகப்படுத்தட்டுள்ளது. அதனை தொடர்ந்து தொழிற்நுட்ப படிப்புகளில் தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டமும் அமலில் உள்ளது. தற்போது அரசு பணிக்க தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுத்துறைகளில் 100% தமிழர்களுக்கு இடமளிக்கும் வகையில் இந்த தமிழ்மொழித் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலை வழங்கும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் செயல்பட்டு வரும் எலெக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதனால் அதிகாரிகள் அவர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். கண்டித்து தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தொழிலாளர்களுடன் பேச்சு நடத்த ஆலை நிர்வாகம் மறுத்து வந்தது. போராடி வரும் தொழிலாளர்களை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு மாற்றாக வட இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் தமிழர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!