இந்தியா முழுவதும் மத்திய அரசு துறைகளில் 8.70 லட்சம் காலிப்பணியிடங்கள் – முழு விபரங்கள் இதோ!

0
இந்தியா முழுவதும் மத்திய அரசு துறைகளில் 8.70 லட்சம் காலிப்பணியிடங்கள் - முழு விபரங்கள் இதோ!
இந்தியா முழுவதும் மத்திய அரசு துறைகளில் 8.70 லட்சம் காலிப்பணியிடங்கள் - முழு விபரங்கள் இதோ!
இந்தியா முழுவதும் மத்திய அரசு துறைகளில் 8.70 லட்சம் காலிப்பணியிடங்கள் – முழு விபரங்கள் இதோ!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. அத்துடன் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் பற்றிய முழு விபரங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2வது அமர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் காரணமாக 1 மாத காலத்திற்கு இந்த 2 வது அமர்வு கடந்த 14ம் தேதி அன்று நடைபெற தொடங்கியது. வருகிற ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கேள்வி நேரத்தின் போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் குறிப்பாக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழக மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு – கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!

இதற்கு மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்தாவது, கடந்த 2020ம் ஆண்டு நிலவரப்படி அரசு அலுவலகங்களில் 77 துறைகளில் சுமார் 40 லட்சத்துக்கும் பணியிடங்கள் உள்ளது. இதில் தற்போது 31 லட்சத்து 33 ஆயிரத்து 658 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அத்துடன் இதில் 8 லட்சத்து 71 ஆயிரத்து 283 பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ரயில்வே துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களில் தற்போது 1.40 லட்ச பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆதார், பான் கார்டினை இணைப்பது எப்படி? மார்ச் 31 கடைசி நாள்! தவறினால் ரூ.1000 அபராதம்!

மேலும் ரயில்வே துறையில் 2.98 லட்சம் காலியிடங்கள் இருப்பதாகவும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஐ.ஐ.டி.களில் 4000க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் கல்வித்துறை இணை மந்திரி சுபாஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார். இதில் கரக்பூர், மும்பை, தன்பாத், சென்னை, கான்பூர், ரூர்க்கி உள்ளிட்ட இடங்களில் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!