ஆதார், பான் கார்டினை இணைப்பது எப்படி? மார்ச் 31 கடைசி நாள்! தவறினால் ரூ.1000 அபராதம்!

0
ஆதார், பான் கார்டினை இணைப்பது எப்படி? மார்ச் 31 கடைசி நாள்! தவறினால் ரூ.1000 அபராதம்!
ஆதார், பான் கார்டினை இணைப்பது எப்படி? மார்ச் 31 கடைசி நாள்! தவறினால் ரூ.1000 அபராதம்!
ஆதார், பான் கார்டினை இணைப்பது எப்படி? மார்ச் 31 கடைசி நாள்! தவறினால் ரூ.1000 அபராதம்!

இந்தியாவில் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இதனை தொடர்ந்து தற்போது பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான கால அவகாசம் விரைவில் முடிவடைய உள்ளதால் பொதுமக்கள் விரைவில் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பான் – ஆதார் இணைப்பு

இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். ஏனெனில் ஆதார் கார்டின் பயன்பாடு பல்வேறு துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதனை முதன்முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவித்தது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை!

அத்துடன் இதற்கான கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் வேகமாக பரவத் தொடங்கியது. அதனால் இந்த கால அவகாசத்தை வருகிற மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும் இணைக்கப்படாதவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஆதார் – பான் இணைக்கவில்லையென்றால் பான் கார்டு செயலிக்கப்படும்.

பான் – ஆதார் இணைப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. முதலாவதாக www.incometaxindiaefiling.gov.in என்ற  இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.

2. இதில் Link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது திரையில் காண்பிக்கப்படும் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் உள்ளிட்டத் தகவல்களை கொடுக்க வேண்டும்.

3. அடுத்ததாக தகவல்களை உள்ளிட்டு ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதை டிக் செய்ய வேண்டும்.

4. இதையடுத்து Captcha குறியீட்டை உள்ளிட்டு அல்லது OTP எண்ணை கொடுக்க வேண்டும். இப்போது Link Aadhaar பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

5. இறுதியாக ஆதார்- பான் கார்டு இணைக்கப்பட்ட செய்தியை தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைலில் பெறுவீர்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!