VI சிம் பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரூ.75 ரீசார்ஜ் திட்டம்!
இந்தியாவில் VI நிறுவனம் ரூ.75 ரீசார்ஜ் திட்டத்தில் 15 நாட்களுக்கு 50 MB டேட்டாவுடன் 50 நிமிட அழைப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரீசார்ஜ் சலுகைகள்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும், அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏராளமானோர் தங்கள் மொபைல் போன் மூலம் இன்டர்நெட்டை கனெக்ட் செய்து பணி செய்கின்றனர்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு – நிதித்துறை அமைச்சர் விளக்கம்!
இதனால் VI, ஜியோ, ஐடியா, ஏர்டெல் போன்ற பிரபல நெட் ஒர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். மற்ற நிறுவனங்களை தொடர்ந்து VI நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, ரூ.75 ரீசார்ஜ் திட்ட சலுகைகளை வழங்குகிறது. 50 MB டேட்டாவுடன் 50 நிமிட வி முதல் வி அழைப்பு சேவையை பெற முடியும்.
TN Job “FB Group” Join Now
இந்த ரீசார்ஜ் திட்டம் 15 நாட்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த புதிய சலுகையால் குறைந்த வருமானம் கொண்ட குழு பயனர்கள் ஊரடங்கில் தொடர்ந்து அவர்கள் இப்போது தங்கள் பணிகளை மீண்டும் தொடங்குகின்றனர். இந்த சேவை அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்கள் 121153 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது அவர்களின் VI எண்ணிலிருந்து *444*75# என்ற எண்ணுக்கு தங்கள் செய்தியை அனுப்பலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.