தமிழக அரசின் மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசின் மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசின் மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசின் மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசின் மீன்வளத் துறையில் சாகர் மித்ரா பணிகளுக்கு காலியாக உள்ள 600 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனைத்து தகவல்களும் மற்றும் விவரங்களும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணிவாய்ப்பு:

தமிழக அரசு தனது பல்வேறு துறைகளுக்குமான பணியாளர்களை நியமிக்கும் பணிகளை மும்முரமாக செய்து வருகிறது. எந்த வித இடைத்தரகர்கள் மூலமாகவும் விண்ணப்பதாரர்கள் ஏமாற வேண்டாம் என்றும் அரசு அளித்துள்ள விவரங்களை பின்பற்றி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று முன்னதாகவே அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது அரசின் மீன்வளத் துறையில் உள்ள 600 சாகர் மித்ரா பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்களை ஜனவரி 12ம் தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆய்வக உதவியாளர் வேலை – ஜன.17 கடைசி நாள்!

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மீன்வளத் துறையில் மீன்வள அறிவியல், கடல் உயிரியியல், விலங்கியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.10,000 + 5,000 என்ற அடிப்படையில் சம்பளம் அளிக்கப்படும். பணிக்கான விண்ணப்ப கட்டணம் ஏதும் கிடையாது.

தமிழகத்தில் நாளை (ஜன.11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சாகர் மித்ரா பணி பற்றிய முழுமையான விவரங்களையும் அரசின் https://www.fisheries.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதே இணையதளத்தில் பணிக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஆவணங்களை இணைத்து உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கடற்கரையோர மாவட்டங்களின் இணை இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். குறைவான கால அவகாசம் மட்டுமே உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைவாக அனுப்பும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!