GAIL நிறுவனத்தில் 48 காலிப்பணியிடங்கள் – ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை மாத ஊதியம்!

0
GAIL நிறுவனத்தில் 48 காலிப்பணியிடங்கள் - ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை மாத ஊதியம்!
GAIL நிறுவனத்தில் 48 காலிப்பணியிடங்கள் - ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை மாத ஊதியம்!
GAIL நிறுவனத்தில் 48 காலிப்பணியிடங்கள் – ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை மாத ஊதியம்!

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. கொரோனா பெருந்தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் வேலை இழந்தவர்களுக்கு இந்த அறிவிப்புகள் மூலம் வேலைக்காக முயற்சித்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் மாநில அரசு துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் மற்றும் மத்திய அரசு தேர்வான SSC, UPSC தேர்வுகளும் நடைபெற உள்ளது. தற்போது புதிய அறிவிப்பாக பொதுத்துறை நிறுவனமான கெயில் (GAIL) இந்தியா லிமிடெட் 48 எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு – ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்!

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் எலக்ட்ரிக்கல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய பாட பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அதில் 65% மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் வயது வரம்பு 26 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. EWS பிரிவினருக்கு 10 ஆண்டுகள் PwBD பிரிவினருக்கு, 13 ஆண்டுகள், PwBD விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகளும் தளர்வு உள்ளது. தகுதியுடையோர் gailonline.com மூலம் மார்ச் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் திருத்தம்!

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு ஓராண்டு பயிற்சி உடன் ஊதியமாக ரூ.60,000 – 1,80,000 வரை வழங்கப்படும். அகவிலைப்படி (VDA) மற்றும் உணவு விடுதி கட்டணம் ஆகிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் தனிநபர் மற்றும் நிறுவன செயல்திறன் அடிப்படையில் செயல்திறன் தொடர்பான ஊதியம். நிறுவனத்தின் தங்குமிடம் / குத்தகைக்கு விடப்பட்ட தங்குமிடம் / HRA, மருத்துவ வசதி, குழு காப்பீடு ஆகியவையும் வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!