SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் திருத்தம்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் திருத்தம்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் திருத்தம்!

தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி நிறுவனம் ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. இந்த திருத்தம் நேற்று (பிப்.15) முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வட்டி விகிதங்கள்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தற்போது ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. அதாவது, இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சில்லறை கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை SBI வங்கி 10 முதல் 15 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது. இந்த மாற்றங்கள் அனைத்தும் நேற்று (பிப்.15) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

Post Office இல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!

இதற்கு முன்னதாக SBI வங்கியில் 2 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு, 5.10 சதவீதமும், 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு குறைவாக உள்ள டெபாசிட்டுகளுக்கு 5.30 சதவீதமும், 5.40 சதவீதத்தில் முதிர்ச்சியடையும் வைப்பு கணக்குகளுக்கு 5.40 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்கியது. இருப்பினும், பிப்ரவரி 15 நிலவரப்படி SBI வங்கியின் 2 முதல் 3 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 5.20%, 3 முதல் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 5.45 %, 5 முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 5.50 % வட்டி விகிதத்தை வழங்குகிறது.

இப்போது SBI வங்கியின் புதுப்பிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் பின்வருமாறு:

பொது மக்களுக்கான தற்போதுள்ள வட்டி விகிதங்கள்:
  • 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை – 2.9
  • 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை – 3.9
  • 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை – 4.4
  • 211 நாட்கள் முதல் 1 வருடம் வரை – 4.4
  • 1 வருடம் முதல் 2 வருடம் வரை – 5.1
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை – 5.2
  • 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை – 5.45
  • 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை – 5.5மூத்த குடிமக்களுக்கான தற்போதுள்ள வட்டி விகிதங்கள் :
  • 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை – 3.4
  • 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை – 4.4
  • 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை – 4.9
  • 211 நாட்கள் முதல் 1 வருடம் வரை – 4.9
  • 1 வருடம் முதல் 2 வருடம் வரை – 5.6
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை – 5.7
  • 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை – 5.95
  • 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை – 6.3

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!