நாடு முழுவதும் 2014 முதல் 2021 வரை 6.98 லட்சம் பேருக்கு பணி நியமனம் – மத்திய அரசு தகவல்!

0
நாடு முழுவதும் 2014 முதல் 2021 வரை 6.98 லட்சம் பேருக்கு பணி நியமனம் - மத்திய அரசு தகவல்!
நாடு முழுவதும் 2014 முதல் 2021 வரை 6.98 லட்சம் பேருக்கு பணி நியமனம் - மத்திய அரசு தகவல்!
நாடு முழுவதும் 2014 முதல் 2021 வரை 6.98 லட்சம் பேருக்கு பணி நியமனம் – மத்திய அரசு தகவல்!

மத்திய அரசு நடத்தும் மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம், பணியாளா் தோ்வாணையம் மற்றும் ரயில்வே தோ்வு வாரியம் ஆகியவை மூலம் கடந்த 2014 இல் இருந்து 2021 வரை மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 6.98 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு தகவல்:

தற்போது மத்திய அரசு பல்வேறு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக வேலையில்லா பட்டதாரிகள் அதிக அளவு பயன் பெறுகின்றனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு நடத்தும் மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (UPSC) மற்றும் பணியாளா் தோ்வாணையம் (SSC) மற்றும் ரயில்வே தோ்வு வாரியம் (RRB) ஆகியவை மூலம் கடந்த 2007 இல் இருந்து 2014 வரை மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 6,19,027 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் தற்போது உள்ள அரசின் மூலமாக கடந்த 7 ஆண்டுகளில் 6,98,011 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளது .

தமிழகத்தில் நாளை (டிச.4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் பணி ஓய்வு, ராஜிநாமா, பதவி உயா்வு, மரணம் ஆகிய காரணங்களால் காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமன்றி மேலும் பல்வேறு புதிய பணியிடங்களை உருவாக்குவதிலும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனால் தான் கடந்த 7 ஆண்டுகளில் ஏராளமான பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மாநிலங்களவையில் மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

அத்துடன் காற்று மாசை குறைக்க தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிஎஸ்-4 ரக வாகனங்களுக்கு மாறாக பிஎஸ்-6 வாகனங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பல நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும் நாட்டில் சுமார் 132 நகரங்களில் காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தேசிய அளவில் காற்று மாசை குறைக்க உதவும் வகையில் உள்ளூா் தொழில்துறைக்கு ரூ.4,400 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!