நடப்பு நிகழ்வுகள் – 4 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 4 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 4 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 4 ஆகஸ்ட் 2023

தேசிய செய்திகள்

வெளிநாட்டில் இறக்கும் இந்தியர்களின் குடும்பங்களுக்கான e-CARe  வலைத்தளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டம்.

  • வெளிநாட்டில் இறக்கும் இந்தியர்களின் உடல்களை விரைவாக சொந்த நாட்டிற்கு மாற்றுவதற்கு வசதியாக, e-CARe(இன்டர்லைஃப் ரீமெய்ன்களுக்கான இ-கிளியரன்ஸ்) என்ற வலைத்தளத்தை மத்திய அரசாங்கம் ஆகஸ்ட் 03 அன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இறந்த மனித உடல்களை சர்வதேச எல்லைகளுக்கு கொண்டு செல்வதில் ஏற்படும் தாமதத்தை தவிர்த்து உரிய நடவடிக்கைகள் மூலம் அவர்களின் சொந்த மண்ணிற்கு கொண்டு சென்று அவர்களின் உடலை  குடும்பத்திற்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த வலைத்தளமானது அமைய உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மத்திய பிரதேசத்தில் நாட்டுப்புற மற்றும் பழங்குடியினரின் கலை நிகழ்ச்சி மற்றும் சர்வதேச இலக்கிய விழாவினை தொடங்கி வைத்துள்ளார்.

  • இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 03 அன்று மத்திய பிரதேசத்தின் போபாலில் இந்தியாவின் பழங்குடியின மற்றும்  நாட்டுப்புற மக்களின் தேசிய விழாவான “உத்கர்ஷ்” மற்றும் சர்வதேச இலக்கிய பெருவிழாவான “உன்மேஷ்” ஆகியவற்றைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • மாநில சங்கீத நாடக அகாடமி அமைப்பு மற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் கலாச்சாரத் துறை மற்றும் சாகித்ய அகாடமி ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஆகஸ்ட் 3 லிருந்து ஆகஸ்ட் 5 வரை நடத்துகின்றன. உத்கர்ஷ் என்றால் பாரம்பரிய முன்னேற்றம் என்றும், பழங்குடியினரின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

ஜன் விஸ்வாஸ் விதிமுறைகள் திருத்த மசோதா 2023- ஐ மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது.

  • ஜன் விஸ்வாஸ் விதிமுறைகள் திருத்த மசோதா 2023 –விற்கு ஆகஸ்ட் 02 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையானது ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த மசோதாவானது சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • நாட்டின் பொது மக்கள் எளிமையாக வாழ்வதற்கும் எளிதாக வணிகம் செய்வதற்கும் நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்கும் மேலும் மேம்படுத்துவதற்காக சில சட்டங்களை திருத்த இந்த மசோதா முயல்கிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சர்வதேச மாணவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் Study In India (SII) என்ற வலைத்தளம் அறிமுகம்.

  • இந்தியாவில் உள்ள சர்வதேச மாணவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் Study In India (SII) என்ற வலைத்தளத்தை மத்திய அரசாங்கம் ஆகஸ்ட் 03 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வலைத்தளத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும்  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்த வலைத்தளத்தின் துவக்கமானது, பல்வேறு நாடுகளின் பின்னணியில் உள்ள மாணவர்களை வரவேற்பதன் மூலம் இந்தியாவை உலக அரங்கில் கல்வியின் மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த வலைத்தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராஜ்மார்க்யாத்ரா என்ற கைபேசி செயலியை NHAI அமைப்பானது அறிமுகப்படுத்துகிறது.

  • இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது(NHAI) பொது மக்கள் மற்றும் பாதசாரிகளை மையமாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த கைபேசி செயலியான ‘ராஜ்மார்க்யாத்ரா’வை ஆகஸ்ட் 2023 இல் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • சரியான நேரத்தில் ஒளிபரப்பு அறிவிப்புகள், விரிவான நெடுஞ்சாலைத் தகவல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தங்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் பிற அத்தியாவசிய சேவைகள் பற்றிய விவரங்களை ஒருங்கிணைத்து அத்தியாவசியத் தகவல்களின் ஒரே இடத்தில் இருக்கும் களஞ்சியமாகச் செயல்படுவதை நோக்கமாக கொண்டு இந்த செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது என NHAI தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்திகள்

600 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட புதிய கப்பல்களை ஈரான் ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது.

  • ஈரான் மற்றும் அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஈரான் ராணுவமானது 600 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அளிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் பொருத்தப்பட்ட புதிய போர்கப்பல்களை ஆகஸ்ட் 03 2023 இல் அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • சமீபத்திய மாதங்களில் அமெரிக்கா கூடுதல் F-16 மற்றும் F-35 போர் விமானங்களையும், ஒரு போர்க்கப்பலையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியதை தொடர்ந்து பதில் நடவடிக்கையாக இந்த அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

குஜராத் மாநில அரசாங்கம் மற்றும் GE Power India நிறுவனம் இடையே 440 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களாது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • குஜராத் மாநில மின்சார வாரியமானது GE Power India நிறுவனத்திடமிருந்து ரூ.440 கோடி மதிப்பிலான மாநிலத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கும், மின்சார கட்டுப்பாடுகளை தளர்த்தி மாநிலம் முழுவதும் தங்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆகஸ்ட்  02 2023 அன்று மேற்கொண்டுள்ளது.
  • அதாவது ஜனவரி 2026 ஆம் ஆண்டிற்குள் தேவையான உற்பத்தி உபகரணங்கள், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி மற்றும் பொருத்துதல் மற்றும் பிஜி சோதனை ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கான வலைத்தளத்தினை அசாம் மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

  • சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்பு மூலம் அசாம் மாநிலம் முழுவதும் மொத்தம் 1 கோடி வணிக ரீதியாக மற்றும் சாத்தியமான செடி, மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்ட ஒரு முன்னெடுப்பு முயற்சியான ‘அம்ரித் ப்ரிக்ஷ்ய அந்தோலன்’ கருப்பொருளின் பாடலுடன் இணைய தளம் மற்றும் கைபேசி செயலியை அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஆகஸ்ட் 02 அன்று தொடங்கி வைத்துள்ளார்.
  • மேலும் அடுத்து வரும் 2025 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 5 கோடி மரக்கன்றுகளை நடுவதும் அதில் மூன்று கோடி வணிக ரீதியிலான மரக்கன்றுகளை நடுவதையும் இலக்காகக் கொண்டிருப்பதாக அம்மாநில முதல்வர் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியிட்டுள்ளார் அறிவித்துள்ளார்.

நியமனங்கள்

பாக்கெட் எஃப்எம் நிறுவனத்தின் AI முன்முயற்சிகளை வழிநடத்துவதற்கு சிவஸ்வாமி அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ஒலிப்பதிவு தொடர் தளத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) முன்னெடுப்பை வழிநடத்துவதற்காக, முன்னாள் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி பன்னகடத்தா கே சிவஸ்வாமியை பாக்கெட் எஃப்எம் நிறுவனம் அதன் தலைவராக ஆகஸ்ட் 2023 அன்று நியமித்துள்ளது.
  • இந்த நியமனம் மூலம் AI இயக்குநராக, இவர் ஸ்டார்ட்அப்பின் AI உதவி மூலோபாயத்திற்கு தலைமை தாங்குவார் என்றும் குரல் உதவியாளர்கள் மற்றும் ஒலிபதிவு உதவியாளர்கள் உள்ளடக்கிய பகுப்பாய்வுகளின் ஒருங்கிணைப்பை மேற்பார்வையிடுவார் என்றும் பாக்கெட் எஃப்எம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபாவின் பதவி காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • மத்திய அமைச்சரவை செயலாளரான ராஜீவ் கவுபாவின் பதவி காலமானது மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிப்பு வழங்கி மத்திய அரசாங்கமானது ஆகஸ்ட் 03 தனது உத்தரவு அறிக்கையை  வெளியிட்டுள்ளது.
  • 1982 ஆம் ஆண்டு பிரிவு(Batch) ஜார்க்கண்ட் கேடரின் ஆட்சிப்பணி அதிகாரியான இவருக்கு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் சக்சேனா பதவியேற்றுள்ளார் – இந்திய ராணுவம்.

  • இந்திய ராணுவத்தின் மதிப்புமிக்க பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் சமீர் சக்சேனா, ஆகஸ்ட் 01 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படைக் கட்டளைத் தொகுதியின் தளபதி பொறுப்பை பெற்றுள்ளார்.
  • மேலும் இவர் வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயனிடம் இருந்து  இந்த தளபதி பொறுப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் IHQ MOD(N) இல் வெளிநாட்டு ஒத்துழைப்புக்கான முதன்மை தலைமை இயக்குநராகவும், லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் கடற்படை ஆலோசகராகவும் இருந்துள்ளார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கடற்படை வட்டாரத்தில் பார்க்க்கப்படுகிறது.

விருதுகள்

சூரிச் திரைப்பட விழாவில் டயான் க்ரூகர் அவர்களுக்கு கோல்டன் ஐ விருதானது வழங்கப்பட்டுள்ளது.

  • ஜெர்மன் நாட்டின் பிரபலமான டயான் க்ரூகர் அவர்களுக்கு சூரிச் திரைப்பட விழாவில் கோல்டன் ஐ விருதுக்கு ஆகஸ்ட் 03 2023 யில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • மேலும் இவருக்கு அக்டோபர் 2 ஆம் தேதி வாழ்நாள் சாதனை பரிசான இந்த கோல்டன் ஐ விருதை அல்லது கௌரவத்தை ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரிச் திரைப்பட விழாவானது செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
LONDON, ENGLAND – JUNE 27: EDITORIAL USE ONLY Diane Kruger arrives at The Serpentine Gallery Summer Party 2023 at The Serpentine Gallery on June 27, 2023 in London, England. (Photo by Karwai Tang/WireImage)

2023 ஆம் ஆண்டிற்கான டெல்லி புத்தகக் கண்காட்சியில் பதிப்பக வெளியீட்டுப் பிரிவானது “சிறந்த காட்சிக்கான” விருதைப் பெறுகிறது.

  • 2023 ஆம் ஆண்டிற்கான டெல்லி புத்தகக் கண்காட்சியில், இந்திய அரசாங்கத்தின் முதன்மையான பதிப்பக வெளியீடுகள் பிரிவானது வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 
  • மேலும் இந்த விருதானது ஆகஸ்ட் 2 அன்று புது டெல்லியில் உள்ள மாபெரும் பிரகதி மைதானத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளையாட்டு செய்திகள்

கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவதற்காக AIFF உடன் சுப்ரோடோ முகர்ஜி விளையாட்டுக் கல்விச் சங்கமானது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

  • முதன்முறையாக, சுப்ரோடோ முகர்ஜி விளையாட்டு கல்வி அமைப்பானது(SMSES) ஆகஸ்ட் 02 அன்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புடன்(AIFF) அடிமட்ட அளவில் கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவதற்காகவும் இளைஞர்களிடையே கால்பந்தாட்டத்தின் விளையாட்டு விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • 1960 ஆம் ஆண்டு முதல் சுப்ரோடோ கோப்பை சர்வதேச கால்பந்து போட்டியை நடத்தி வரும் SMSES, இந்த ஆண்டின் பதிப்பில் இருந்து 17 வயதுக்குட்பட்டோருக்கான சுப்ரோடோ XI (பதினொரு) அணியை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுட்டள்ளது.

பொருளாதார செய்திகள்

சூதாட்ட விடுதி மற்றும் ஆன்லைன் விளையாட்டிற்கு 28% ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற 51வது ஜிஎஸ்டி கவுன்சில் பொது கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்ட விடுதி ஆகியவற்றிற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டியானது விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • மேலும் இந்த 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பானது வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் இது நடைமுறைப்படுத்தப்படும் விதத்தை ஆறு மாதங்களுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்ய கவுன்சில் ஒப்புக்கொண்டதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியானது வரலாறு காணாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது.

  • 2022-23 ஆம் நிதியாண்டில் 776.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்து இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியானது இதுவரை இல்லாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது என மத்திய அரசாங்கம் ஆகஸ்ட் 03 2023 அன்று தெரிவித்துள்ளது.
  • புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை மார்ச் 31, 2023 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்றுமதி திறன் கொண்ட பொருட்களை கண்டறிந்து அம்மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கியதே இந்த உச்சத்தை அடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

கிராம்பு நோய்க்குறி விழிப்புணர்வு தினம் 2023

  • அரிய மரபணுக் கோளாறு அல்லது கிராம்பு நோய்க்குறி பற்றிய விழிப்புணர்வை உலக சமூக, பொது மக்களுக்கு பரப்புவதை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 3 ஆம் நாளானது கிராம்பு நோய்க்குறி விழிப்புணர்வு தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த நோயானது பாதிக்கப்பட்டவரின் திசுக்களின் அதிகப்படியான வளர்ச்சியால் குறைபாடுகளை ஏற்படுத்தி ஒரு நபரின் உடல் மற்றும் உணர்ச்சி மற்றும் மன நல்வாழ்வை பாதிக்கிறது. எனவே இந்த தினத்தின் மூலம் உலக ஆதரவை இந்நோயில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திரட்டுவதை நோக்கமாக கொண்டு இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்திற்கென்று எந்த ஒரு கருப்பொருளும் இல்லை.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!