வங்கிகளுக்கு தொடர்சியாக 4 நாட்கள் விடுமுறை? – முழு விவரம் இதோ!

0
வங்கிகளுக்கு தொடர்சியாக 4 நாட்கள் விடுமுறை
வங்கிகளுக்கு தொடர்சியாக 4 நாட்கள் விடுமுறை

வங்கிகளுக்கு தொடர்சியாக 4 நாட்கள் விடுமுறை? – முழு விவரம் இதோ! நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நிலையில், தொடர்சியாக 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட உள்ளது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விடுமுறை நாட்களை முன்னதாக வெளியிட்டு விடுகிறது. தேசிய விடுமுறைகளை தவிர மற்ற விடுமுறைகள் அனைத்தும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி பணிகளை திட்டமிடுவதற்கு முன்னதாக  தங்கள் மாநில வங்கி வேலை நாட்களை குறித்து அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.

அக்டோபர் 24ம் தேதியாக இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் நான்கு வங்கி விடுமுறைகள் வருகிறது. இதற்கான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பட்டியல்:

அக்டோபர் 24: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை காரணமாக வங்கிகள் விடுமுறை. இருப்பினும், காங்டாக் மற்றும் இம்பாலில் வங்கிகள் செயல்படுகின்றன.

25 அக்டோபர்: காங்டாக், இம்பால் மற்றும் ஜெய்ப்பூர் பிராந்திய அலுவலகங்களின் கீழ் வரும் வங்கிக அக்டோபர் 25ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மற்ற பிராந்திய அலுவலகங்களின் கீழ் வரும் வங்கிக் கிளைகள் இந்த தேதியில் திறந்திருக்கும்.

அக்டோபர் 26: அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய வங்கிக் கிளைகள் இந்த தேதியில் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 27: காங்டாக், இம்பால், கான்பூர் மற்றும் லக்னோவின் கீழ் வரும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!