அப்போ எல்லாமே பொய்யா..உண்மைய மறந்து சிக்கி கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்..நிரூபித்த நெட்டிசன்கள்!பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் பலதரப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒரு போட்டியாளர் தனது வாழ்க்கையைப் பற்றி கூறிய கதை அனைத்தும் பொய் என்று நிரூபிக்கும் விதமாக நெட்டிசன்கள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர்.
கதை சொல்லும் நேரம்
பிக் பாஸ் சீசன் வரலாற்றில் எப்போதுமே முதல் இரண்டு வாரங்களில் போட்டியாளர்களின் வாழ்க்கைப் பயணத்தை சொல்லும் டாஸ்க் கொடுக்கப்படும். இந்த முறை சற்று வித்தியாசமாக யோசித்து பிக் பாஸ் போட்டியாளர்கள் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்றால் மற்றவர்கள் கொடுக்கப்பட்டுள்ள ரெட்லைட்டை அழுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தார். தொடர்ச்சியாக மூன்று லைட்டுகள் எரிந்தால் அந்த போட்டியாளரின் கதை நிராகரிக்கப்பட்டு விட்டதாக அர்த்தம். அந்த வகையில் பலரின் கதைகளும் 3 ரெட் லைட்டுகளை பெற்று நிராகரிக்கப்பட்டது. ஒரு சிலரின் கதைகள் மட்டுமே முழுமையாக கேட்கப்பட்டது.
அந்த வகையில் நடன இயக்குனர் ராபர்ட் தனது வாழ்க்கை கதையை தொடங்க ஆரம்பித்ததும் நடிகை மைனா மட்டுமே ரெட் லைட்டை அழுத்தினார், மற்றவர் யாரும் அடிக்கவில்லை. இதனால் ராபர்ட் மாஸ்டர் முழுமையாக தனது கதையை செல்வதற்கான வாய்ப்பை பெற்றார். அவரது கதையில் தன் சிறுவயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டதாகவும் அந்த சமயத்திலேயே அதிக அளவு பணம் செலவு செய்து தனது தந்தை தன்னை சரிப்படுத்தியதாகவும் கூறியிருந்தார். வீட்டின் கடைக்குட்டி என்பதால் மற்ற அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் இடத்தில் தான் இருந்ததாகவும் கூறினார்.
தான் சிறுவயதிலிருந்தே நடனத்திலும் நடிப்பிலும் ஆர்வமாக இருந்ததால் படிப்பின் மீது தனக்கு நாட்டம் இருக்கவில்லை என்றும் மிகவும் சிறு வயதிலேயே தன்னுடன் நடனமாடிய சக பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும், ஆனால் அதற்குப் பிறகு தன்னை பிடிக்கவில்லை என்று தன் மனைவி தன் குழந்தையோடு சென்று விட்டதாகவும் கூறினார். இத்தனை வருடங்களாக தாங்கள் பிரிந்து இருப்பதாகவும் தனது மகளுக்கு நான் தான் தந்தை என்பது இதுவரை தெரியாது என்றும் கூறியிருந்தார். இது பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது.
தன் மகளுக்கு தான் யார் என்று தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் நெட்டிசன்கள் அவரின் சமூக வலைதள பதிவுகளில் இருந்து பழைய பதிவு ஒன்றை எடுத்து உள்ளனர். அதில் தனது மகள் என்று ஒரு பெண் குழந்தையுடன் ராபர்ட் மாஸ்டர் உள்ளார். இதுதான் அவரது மகள் என்றால் நிகழ்ச்சியில் கூறிய அனைத்தும் பொய்யான தகவல்களா? என்று நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்