382வது மெட்ராஸ் தின போட்டிகள் குறித்த அறிவிப்பு – சென்னை மாநகராட்சி வெளியீடு!
சென்னை மாநகராட்சியில் 382-வது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், பொதுமக்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மெட்ராஸ் தினம்:
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள், பொதுமக்களுக்கு போட்டிகள் நடத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 382 ஆம் ஆண்டு மெட்ராஸ் தினமாகும். மதராசப்பட்டினம் 1639 முதல் தற்பொழுது வரை பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து சென்னை மாநகரமாக 382வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்த தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் போட்டிகள் குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குடிசைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் அழகுப்படுத்தும் பணி வருகிற 22 ஆம் தேதி அமைச்சர்களால் நடத்தப்படுகிறது.
ஆகஸ்ட் 24 வரை இண்டிகோ விமான வர்த்தகத்திற்கு தடை – UAE உத்தரவு!
அதுமட்டுமில்லாமல் உங்களது பகுதியில் உள்ள குடிசை பகுதிகளில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்களை செல்பி புகைபடமாக எடுத்து 94451 90856 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். இதில் சிறந்த சுவர் ஓவியங்கள் மாநகராட்சியின் டுவிட்டர் தளத்தில் பகிரப்படும். மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுத்து twitter@chennaicorp-ல் பகிரலாம். மெட்ராஸ் தின நிகழ்ச்சிகளில், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
மேலும் சிங்கார சென்னை குறித்த ஓவிய போட்டி வருகிற ஆகஸ்ட் 20, 21 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டி வருகிற 2ம் தேதி மாநகராட்சி கட்டடச் சுவர்கள், பாலங்களின் கீழுள்ள இடங்கள் மற்றும் இதர பொது இடங்களில் நடத்தப்படும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய ஓவியங்களை போட்டி நடைபெறும் நாட்களில் பதிவேற்றம் செய்யலாம். மேலும் சென்னை மாநகரின் அடையாளத்தை குறிக்கும் சிற்பங்கள் தயார் செய்து வருகிற 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நேரடியாக மாநகராட்சி தலைமையிடத்தில் உள்ள சென்னை சீர்மிகு நகரத் திட்ட அலுவலகத்தில் வழங்கலாம். மேலும், இது குறித்த தகவல்களை 94451 90856 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.