உக்ரைன், ரஷ்யா இடையே தொடரும் போர் பதற்றம் – 3500 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு!

0
உக்ரைன், ரஷ்யா இடையே தொடரும் போர் பதற்றம் - 3500 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு!
உக்ரைன், ரஷ்யா இடையே தொடரும் போர் பதற்றம் - 3500 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு!
உக்ரைன், ரஷ்யா இடையே தொடரும் போர் பதற்றம் – 3500 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு!

உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனால் ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் குண்டு வீசி வருகின்றனர். இதற்கு எதிராக உக்ரைன் நடத்திய தாக்குதலில் 3500 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள் என உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

போர் பதற்றம்

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர இருப்பதாக தெரிவித்தது. ஆனால் நேட்டோ படையில் உக்ரைனை இணைக்கக் கூடாது என்றும், சோவியத்யூனியனில் இருந்து பிரிந்த எந்தவொரு நாட்டையும் நேட்டோவில் சேர்க்கக் கூடாது என்றும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அத்துடன் உக்ரைனின் டான்ஸ்க், லாஹன்ஸ்க் மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இது தொடர்பாக அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் ரஷ்யாவின் கருத்துக்கு எந்தவொரு வரவேற்பும் கிடைக்கவில்லை.

தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கைரேகை சரிபார்க்காமல் பொருட்கள்!

அதனால் உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்று ரஷ்ய முடிவு செய்துள்ளது. மேலும் நோட்டா அமைப்பில் எப்போதும் சேர மாட்டோம் என்று உக்ரைன் உறுதி அளித்தால் இந்த போர் நடைபெறாது என்றும் ரஷ்யா தரப்பில் கூறப்பட்டது. ஆனால் உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைய உள்ளதாக தொடர்ந்து தெரிவித்து வந்ததால் ரஷ்யா அதிபர் உடனடியாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி உக்ரைன் தலைநகர் மீதும் மற்றும் பல பகுதிகளிலும் ராணுவ படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

Post Office இல் மாதம் ரூ.1000 சேமித்து 5 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் உக்ரைனின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பு படைகள் தாக்குதல் நடத்தி வந்தனர். அதன்படி இந்த தாக்குதலால் நேற்று 800 ரஷ்ய ராணுவத்தின் வீரர்கள் உயிரிழந்தனர் என்று உக்ரைன் தெரிவித்தது. ஆனால் இன்று 3500 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் ரஷ்ய ராணுவத்தின் 102 போர் டாங்கிகள், 536 கவச வாகனங்கள், 15 பீரங்கிகள், 14 போர் விமானங்கள் 8 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!