Post Office 50 ரூபாய் முதலீட்டில் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!

0
Post Office 50 ரூபாய் முதலீட்டில் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ் - சூப்பர் சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!
Post Office 50 ரூபாய் முதலீட்டில் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ் - சூப்பர் சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!
Post Office 50 ரூபாய் முதலீட்டில் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்! முழு விபரம் இதோ!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் கிராம சுரக்ஷா திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை உள்ளிட்ட பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சேமிப்பு திட்டம்

இந்தியாவில் கொரோனா காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. அத்துடன் சாதாரண மக்களும் தங்களது பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான மற்றும் ஆபத்து இல்லாத வகையில் சேமிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். இதில் குறிப்பாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் பெரும்பாலானோர் சேமிக்க தொடங்கினர். ஏனெனில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால் மிகவும் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும். அதனால் பொதுமக்கள் மத்தியில் இந்த சேமிப்பு திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பிப்.14 (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிக பலன்களை தரக்கூடிய கிராம சுரக்ஷா திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க குறைந்தபட்சமாக 1500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது உடையவர்கள் வரை இணைய முடியும். மேலும் இந்த திட்டத்தில் sum insured அளவு 10,000 முதல் 10 லட்சம் வரை உள்ளது. இதில் தங்களுக்கு தேவையான அளவீட்டை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு தோறும் என்ற அடிப்படையில் மாத தொகையை செலுத்தலாம்.

கிராம சுரக்ஷா திட்டத்தில் 19 வயதுடைய நபர் 10 லட்சம் என்ற sum insured அளவீட்டை தேர்வு செய்கிறார் எனில் மாதந்தோறும் 1515 ரூபாய் செலுத்த வேண்டும். அதன்படி தினமும் 50 ரூபாய் சேமிக்க வேண்டும். இதையடுத்து முதிர்வு காலம் முடியும் போது அதாவது 55 வயது முடிவில் ரூ.31.60 லட்சம் வரை சேமிக்க முடியும். இதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் 60 ஆண்டுகாலம் முடிவில் 34.60 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். அதனால் இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாகவும் உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!