நடப்பு நிகழ்வுகள் – 30 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 30 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 30 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 30 ஆகஸ்ட் 2023

தேசிய செய்திகள்

சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்வெளி விண்கலத்தை செப்டம்பர் 2 இல் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்வெளி திட்டமான ஆதித்யா-எல்1 விண்கலத்தை இஸ்ரோவானது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்தில் இருந்து செப்டம்பர் 2 அன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • ஆதித்யா எல் 1 திட்டத்திற்காக பிஎஸ்எல்வி-சி 57 ஏவுகணையை பயன்படுத்த உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த விண்கலமானது பூமியிலிருந்து கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியன்-பூமி அமைப்பின் “லாக்ரேஞ்ச் புள்ளி L1” ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகளை மேற்கொள்ளுவதை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகும்.

இந்திய குடியரசு தலைவர் என்டிஆர் நினைவாக ரூபாய் 100 நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார்.

  • ஆகஸ்ட் 28 அன்று தேசிய தலைநகரமான புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் ஆந்திர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் அவர்களின் நூறாவது ஆண்டை முன்னிட்டு அவரது நினைவாக ரூ.100 நினைவு நாணயத்தை இந்திய குடியரசு தலைவர் முர்மு வெளியிட்டுள்ளார்.
  • தெலுங்கு திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமா மற்றும் மொழி கலாச்சாரத்தை வளப்படுத்தியவர் பத்மஸ்ரீ என்.டி.ராமராவ் அவர்கள் பல்வேறு விருதுகளை தனது ஆற்றலின் மூலம் பெற்றவர் இவர் என்றும் இவருக்கு மதிப்பளிக்கவும் இவரின் ஆற்றலை போற்றவும் இந்த மதிப்புமிக்க செயலை அர்பணித்தற்காக பெருமை அடைகிறன் என்றார் குடியரசு தலைவர் முர்மு.

ஐஎம்ஏ ஹவுஸ் ஒத்துழைப்பு மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை NBCC மேற்கொண்டுள்ளது.

  • NBCC இந்தியா நிறுவனமானது ஆகஸ்ட் 25 அன்று இந்திய மருத்துவ சங்கத்துடன் (IMA) புது தில்லியில் உள்ள ஐஎம்ஏ ஹவுஸின் திட்டமிடல், வடிவமைத்தல், ஐபி எஸ்டேட் சீரமைப்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • IMA அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஷரத் குமார் அகர்வால் மற்றும் NBCC அமைப்பின் தலைமை பொது மேலாளர் (பொறியியல்) பிரதீப் சர்மா ஆகியோர் தலைமையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் முதல் 100% எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனத்தை மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை முழுவதும் குறைப்பதையும், வாகனங்களில் உள்ள எரிபொருள் செயல்திறனை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உலகின் முதல் 100 சதவீத எத்தனால் எரிபொருளைக் கொண்ட மகிழுந்தை புது டெல்லியில் ஆகஸ்ட் 29 அன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • நாட்டில் கார்பன் தடயத்தைக் குறைப்பதையும், நிலையான இயக்கத்தை மேம்படுத்துவதையும் பாரம்பரிய எரிபொருள் ஆதாரங்களில் நாட்டின் சார்புநிலையைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த முன்னெடுப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செய்திகள்

சுரங்கத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) சவுதி அரேபியா மேற்கொண்டுள்ளது.

  • இரு நாடுகளின் சுரங்கத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக சவுதி அரேபியா மற்றும் துருக்கி என இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது(MoU) ஆகஸ்ட் 28 2023 அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • துளையிடும் தொழில்நுட்பங்கள், கனிம ஆய்வு, புவியியல் சேவைகள் மற்றும் பிற துறைகளில் இரு நாடுகளின் நிபுணத்துவ மேலாண்மை பரிமாற்றத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய குதிரை வளர்ப்பு முறைகளை மேம்படுத்த UAE மற்றும் சீனா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • அரேபிய குதிரைகளின் வளர்ப்பு முறை, அதன் அந்தஸ்தை அதிகரிப்பதில் அவர்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் அதன் நிபுணத்துவ வழிமுறைகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு அமீரக அரேபிய குதிரை சங்கமானது(EAHS) சீன அரேபிய குதிரை சங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை(MoU) ஆகஸ்ட் 28 2023 அன்று மேற்கொண்டுள்ளது.
  • குதிரை மற்றும் கால்நடைகளை வளர்ப்பவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகளை மிக உயர்ந்த சர்வதேச தரத்தின்படி வழிமுறைகளை மேம்படுத்துவதில் இந்த ஒப்பந்தமானது முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மேற்கு மண்டல கவுன்சில் கூட்டமானது காந்திநகரில் நடைபெற்றுள்ளது.

  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆகஸ்ட் 28 அன்று குஜராத் மாநில தலைநகரமான காந்திநகரில் மேற்கு மண்டல கவுன்சிலின் 26வது பொது கூட்டமானது நடைபெற்றுள்ளது. அதே சமயத்தில் மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் செயலகத்தின் மின்-வள இணையதள அமைப்பையும் மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த போஷன் அபியான், ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தின் பலன்களை ஒவ்வொரு ஏழைகளுக்கும் எடுத்துச் செல்லுதல் மற்றும் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களை மேம்படுத்தலை நோக்கமாக கொண்டு இந்த கூட்டமானது நடைபெற்றுள்ளது.

இளம் விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்காக ஜெர்மனியுடன்  மகாராஷ்டிரா அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

  • மகாராஷ்டிரா மாநில அரசாங்கமானது 14 வயதுக்குட்பட்ட இளம் வீரர்களுக்கான கால்பந்து அணியை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு ஜெர்மனியின் தொழில்முறை அசோசியேஷன் கால்பந்து அமைப்பான ‘பன்டெஸ்லிகா’வுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
  • மகாராஷ்டிரா அரசின் சார்பாக பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை முதன்மைச் செயலர் ரஞ்சித் சிங் தியோல் தலைமையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் முதல் யுபிஎஸ் தொழில்நுட்ப மையமானது சென்னையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

  • தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 28 அன்று மாநில தலைநகரமான சென்னையில் அமெரிக்க விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் பன்னாட்டு கப்பல் நிறுவனமான யுனைடெட் பார்சல் சர்வீஸின்(யுபிஎஸ்) நாட்டின் முதல் தொழில்நுட்ப மையத்தைத் திறந்து வைத்துள்ளார். 
  • திறப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்த நிறுவனங்கள் தமிழகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றும் இத்தகைய நிறுவங்கள் மூலம் மாநில பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். 

நியமனங்கள்

பாகிஸ்தானில் இந்திய தூதரகத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண் என்ற அந்தஸ்தை கீதிகா பெறுகிறார்.

  • 2005 பிரிவு இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரியான கீதிகா ஸ்ரீவஸ்தவா, பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் புதிய விவகார பொறுப்பு அதிகாரியாக(CDA) நியமிக்கப்பட்டுள்ளதாக MEAஇன் சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • இவர் தற்போதைய டாக்டர் எம் சுரேஷ் குமாருக்கு அடுத்தப்படியாக இந்த பதவி வகிப்பார் மேலும் சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

FIDC அமைப்பின் புதிய தலைவராக உமேஷ் நியமனம்.

  • இந்தியாவில் சொத்து மற்றும் கடன் நிதி வழங்கும் NBFC-களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அமைப்பான மத்திய நிதி தொழில் மேம்பாட்டு கவுன்சிலின்(FIDC) புதிய தலைவராக உமேஷ் ரேவங்கர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற நிறுவன மேலாண்மை கூட்டத்தில் இவரை நிர்வாகக் குழு தேர்வு செய்துள்ளது. இவர் இந்த பதவியில் இரண்டு காலம் வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது ஸ்ரீராம் நிதி நிறுவனத்தின் செயல் துணைத் தலைவராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Procter & Gamble India நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக(CMO) மகேஸ்வரி நியமனம்.

  • விஸ்பர், ஏரியல் மற்றும் ஜில்லட் ஆகிய தொகுப்புகளின் தயாரிப்பாளர் மற்றும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான Procter & Gamble India -வின், தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக (CMO) முக்தா மகேஸ்வரி சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும் இவர் செப்டம்பர் 1 முதல் நிறுவனத்தின் இந்த பொறுப்பை ஏற்பார் என அந்நிறுவனம் ஆகஸ்ட் 28 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இவர் தற்போதைய ஷரத் வர்மாவின் பதவி உயர்விற்கு பிறகு இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஷெல் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக திரிபாதி நியமனம்.

  • ஷெல் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராந்திய தலைவராக மான்சி மதன் திரிபாதி அவர்கள், நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இவர் இந்த பொறுப்பை  அக்டோபர் 1ஆம் தேதி ஏற்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு முதல் நாட்டின் தற்போதைய தலைவராக இருக்கும் நிதின் பிரசாத் அவர்களின் பதவி நிறைவுக்கு அடுத்தபடியாக இவர் இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

PB Fintech நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சர்ப்வீர் சிங் நியமனம்.

  • இந்திய முக்கிய வாகன காப்பீட்டு நிறுவனமான பாலிசிபஜாரின் தாய் நிறுவனமான பட்டியலிடப்பட்ட பிபி ஃபின்டெக் குழுமத்தின் புதிய கூட்டுக் குழு தலைமை நிர்வாக அதிகாரியாகவும்(CEO) ஸ்டார்ட் அப் பிரிவின் நிர்வாக தலைவராகவும் சர்ப்வீர் சிங்கை நியமித்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆகஸ்ட் 2023 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இவர் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பாலிசிபஜாரில் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிறுவன விரிவாக்கத்திற்கு தலைமை பொறுப்பும் தற்போது செயல் அல்லாத இயக்குனராகவும் இருந்து இந்த பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் CFO ஆக அர்னாப் ராய் நியமனம்.

  • இந்தியாவின் புகழ்பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின், ஷ்னைடர் நிர்வாகியான அர்னாப் ராய் அவர்களை அந்நிறுவன தலைமை நிதி அதிகாரியாக(CFO)  நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • அக்டோபர் 16 இல் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிறுவன CFO ஆக உள்ள அஜய் சேத் அவர்களின் பதவி காலமானது டிசம்பர் 31அன்று முடிவடையும் நிலையில் இந்த நியமனமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டள்ளது.

ஹவ்டன் இந்தியா-நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அபிஜித் சேத்தி நியமனம்.

  • உலகளாவிய காப்பீட்டு விவகாரங்களுக்கான இடைத்தரகரான ஹவ்டன் நிறுவனமானது, அதன் இந்திய நடவடிக்கைகளின் தலைமை செயல் அதிகாரியாக அபிஜித் சேத்தியை நியமித்துள்ளதாக ஆகஸ்ட் 29 அன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • நாடு முழுவதும் நிறுவன வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளை மேற்பார்வையிடுதல்,  செயல்முறைகளை செம்மைப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த நியமனமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய தினம்

தேசிய சிறு தொழில் தினம் 2023

  • நாட்டில் உள்ள குறு மற்றும் சிறு தொழில்களின் சாதனைகளைக் குறிப்பிட்டு பாராட்டுவதற்கும் அவர்களின் வளர்ச்சி மற்றும் உறுதி மேம்பாட்டிற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை தொழில்முனைவோருக்கு கொண்டு செல்வதையும் நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று தேசிய சிறுதொழில் தினமானது கொண்டாடப்படுகிறது.
  • சிறு, குறு தொழில்முனைவோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அதை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை மேம்படுத்துவதையும் பொது கருத்தாக கொண்டு இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!