ஜீ தமிழ் சேனலில் புதிதாக ஆரம்பிக்கும் மூன்று புதிய நிகழ்ச்சி – பண்டிகைக்கால கொண்டாட்டம்!
வர இருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தை ஒட்டி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், ஜீ தமிழ் சேனலில் புதிதாக மூன்று நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.
புதிய நிகழ்ச்சிகள்:
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் மக்கள் விரும்பி பார்ப்பது சீரியல்கள் தான். தமிழின் முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் விதவிதமாக சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதிலும், ஒரு சேனலை விட மற்ற சேனல் அதிக ரசிகர்களை பெறுவதற்காக புதுப்புது கதைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் சீரியல் மக்களை தவறு வகையில் பல ரியாலிட்டி ஷோக்களையும், தொடர்களையும் ஒளிபரப்பி வருகிறது. தற்போது அடுத்தடுத்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் வர உள்ளது.
‘செம்பருத்தி’ ஷபானாவிற்கு திருமணமான ஒரே மாதத்தில் ஆர்யனுடன் விவாகரத்து? அவரே அளித்த விளக்கம்!
இதனால் ரஜினி மற்றும் வித்யா நம்பர் 1 என்கிற 2 சீரியல்களையும், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 ஆகிய 3 புதிய நிகழ்ச்சிகளை தொடங்க இருக்கிறது. இதற்கான ப்ரோமோக்களும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4, முதல் சீசன் முதல் தற்போது 4 வது சீசன் வரை மிகவும் சூப்பர் ஹிட்டாக செல்லும் இந்த நிகழ்ச்சி டிசம்பர் 26 ஞாயிறு அன்று மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. தற்போது சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கலக்கி வரும் குழந்தை நட்சத்திரங்களான லிசா முதல் அஸ்வந்த் வரை அனைவரும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டவர்கள் தான். இந்த நிகழ்ச்சியில் சினேகா, மிர்ச்சி செந்தில் மற்றும் பிக்பாஸ் சம்யுக்தா ஆகியோர் நடுவார்களாகவும், விஜே கல்யாணி மற்றும் அமுதவாணன் குழந்தைகளுக்கான வழிகாட்டுனராகவும் உள்ளனர்.
யுவனின் இசையில் மிரட்டலான ‘விசில் தீம் மியூசிக்’ – வலிமை அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
அடுத்தபடியாக, டிசம்பர் 27ம் தேதி திங்கள்கிழமை இரவு 9:30 மணி முதல் நடிகை ஷ்ரேயா நடிக்கும் ரஜினி என்ற தொடர் ஆரம்பமாகிறது. தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஒரு பெண்ணாக தாங்கி, அதற்காக தனது ஆசைகளையும், கனவுகளையும் ஒதுக்கிய பெண் கதாப்பாத்திரத்தில் ஷ்ரேயா நடிக்கிறார். இந்த தொடரில், யாழினி (ரஜினியின் உயிர்த்தோழி), அருண் (அனிதாவின் தம்பி), பார்த்திபன், நடிகை ஸ்ரீலேகாதாயாக, சுபிக்ஷா, ப்ரீத்தா சுரேஷ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இரவு 10 மணிக்கு வித்யா நம்பர் 1 சீரியல் அதே நாளில் தொடங்குகிறது. இந்த தொடரில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் கதாநாயகி தேஜஸ்வினி, நடிகை நிஹாரிகா யூடியூப் பிரபலம் இனியன், சஞ்சய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.