யுவனின் இசையில் மிரட்டலான ‘விசில் தீம் மியூசிக்’ – வலிமை அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
யுவனின் இசையில் மிரட்டலான 'விசில் தீம் மியூசிக்' - வலிமை அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
யுவனின் இசையில் மிரட்டலான 'விசில் தீம் மியூசிக்' - வலிமை அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
யுவனின் இசையில் மிரட்டலான ‘விசில் தீம் மியூசிக்’ – வலிமை அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக உள்ள வலிமை படத்திற்கான விசில் தீம் மியூசிக் தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

வலிமை அப்டேட்:

அஜித்குமார் நடிப்பில் இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு விஸ்வாசம் வெளியானது. அதன் பிறகு அஜித்தின் படம் எப்போது வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் காத்திருக்க தொடங்கி விட்டனர். பின் நேர்கொண்ட பார்வை படத்தில், ஒரு வக்கீலாக ஆரவாரம் இன்றி நடித்திருப்பார். அவரது ஆக்சன் காட்சிகள் நிறைந்த கமர்சியல் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அப்போது, தான் வலிமை படத்தின் அறிவிப்பு வெளியானது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் தயாராகி உள்ளது.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ தேவயானி – ரசிகர்கள் ஷாக்!

படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காலா படத்தில் நடித்த ஹீமா குரேஷியும் வில்லனாக கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். நடுவில் ஊரடங்கு முடக்கத்தினால் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. இதனால் வலிமை அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்க தொடங்கினார்கள். இணையத்தில் எந்த தலைப்பாக இருந்தாலும், அதில் வலிமை அப்டேட் பற்றி கேள்விகள் அதிக அளவில் இடம்பிடித்தது. இதனால் படக்குழுவினர் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்தனர். அதனை தொடர்ந்து சமீபத்தில் வலிமை மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வந்தது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டின் ரூல்ஸை மீறிய ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – வீக் எண்ட் ப்ரோமோ!

யுவன் சங்கர் ராஜா இசையில் வலிமை படம் உருவாகியுள்ளதால், படத்தின் பாடல்கள் மீது தனி கவனம் இருந்து வந்தது. படத்தின் முதல் டிராக் இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில் “நாங்க வேற மாறி” வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக கடந்த வாரம் வெளியான அம்மா பாடல் தற்போது இணையம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை படத்தின் விசில் தீம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் காலை முதல் காத்திருக்க தொடங்கினார்கள். இந்நிலையில், தற்போது வலிமை படத்தின் ‘விசில் தீம் மியூசிக்’ வெளியாகி உள்ளது. அதில் யுவனின் இசை வேற லெவல் என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!