‘செம்பருத்தி’ ஷபானாவிற்கு திருமணமான ஒரே மாதத்தில் ஆர்யனுடன் விவாகரத்து? அவரே அளித்த விளக்கம்!

0
'செம்பருத்தி' ஷபானாவிற்கு திருமணமான ஒரே மாதத்தில் ஆர்யனுடன் விவாகரத்து? அவரே அளித்த விளக்கம்!
'செம்பருத்தி' ஷபானாவிற்கு திருமணமான ஒரே மாதத்தில் ஆர்யனுடன் விவாகரத்து? அவரே அளித்த விளக்கம்!
‘செம்பருத்தி’ ஷபானாவிற்கு திருமணமான ஒரே மாதத்தில் ஆர்யனுடன் விவாகரத்து? அவரே அளித்த விளக்கம்!

திருமணம் ஆகி ஒரு மாதம் கடந்திருக்கும் நிலையில் நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யன் இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக வெளியாகி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஷபானா ஒரு வீடியோவை வெளியிட அது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை ஷபானா

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை ஷபானா, நடிகர் ஆர்யனை காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிகளின் காதல் துவங்கி கல்யாணம் வரை என பல விஷயங்கள் ரசிகர்களுக்கு இதுவரை அறியப்படாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. அதாவது ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா, விஜய் டிவி ‘பாக்கியலட்சமி’ சீரியல் நடிகர் ஆர்யனை எப்போது சந்தித்தார், எப்படி காதலித்தார் என்பது போன்ற பல ரகசியங்கள் இவர்களை சுற்றி உலா வந்து கொண்டிருக்கிறது.

விஜய் டிவி விருதுடன் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா வெளியிட்ட பதிவு – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இதற்கிடையில் நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யனின் திருமணமும் தற்போது பெரிய சர்ச்சைக்குள் சிக்கி இருக்கிறது. அதாவது, ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும், திருமணத்திற்கு பின்பாக ஆர்யனின் வீட்டார் ஷாபனாவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

யுவனின் இசையில் மிரட்டலான ‘விசில் தீம் மியூசிக்’ – வலிமை அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

இதனுடன் இப்போது தான் திருமணமான ஷபானா, ஆர்யன் தம்பதிகளுக்குள் இவ்வளவு பிரச்சனையா என்பது துவங்கி விவாகரத்து வரை பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் அத்தனையும் வதந்தி என்று நடிகர் ஆர்யன் விளக்கம் கொடுக்க, நடிகை ஷபானாவோ நிச்சயதார்த்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ஆர்யன் மீதான காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் இருவரும் சந்தோஷமாக இருப்பதை உணர்த்தும் விதமாக நடிகை ஷபானா வெளியிட்ட இந்த பதிவு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல அமைந்திருக்கிறது என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here