நடப்பு நிகழ்வுகள் – 26 ஜூலை 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 26 ஜூலை 2023
நடப்பு நிகழ்வுகள் - 26 ஜூலை 2023

 

நடப்பு நிகழ்வுகள் – 26 ஜூலை 2023

தேசிய செய்திகள்

உயிரித்தொழில்நுட்பவியல் துறையை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் அர்ஜென்டினாவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது

  • விவசாயத் துறை மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் தொழில்முனைவோர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களின் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக அர்ஜென்டினாவும் இந்தியாவும் ஜூலை 25 2023 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • அர்ஜென்டினாவின் 4வது பெரிய வர்த்தகப் பங்கேற்பாளராக இந்தியா உள்ளது மற்றும் இருதரப்பு வர்த்தகமானது 2022 ஆம் ஆண்டில் 6.4 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

குஜராத்தின் முதல் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை பிரதமர் மோடி அவர்களால் ஜூலை 27 அன்று திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது

  • குஜராத்தின் முதல் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை ராஜ்கோட் பகுதிக்கு அருகே ஹிராசரில் பிரதமர்  மோடி ஜூலை 27ஆம் தேதி அன்று திறந்து வைக்க உள்ளார்
  • 1,405 கோடி மதிப்புள்ள 1500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையமானது ராஜ்கோட் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த விமான நிலையத்திற்கு 2017ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • சர்வதேச சந்தைக்கான விமான இணைப்பு தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கவும் குறிப்பாக பிராந்தியத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசாங்கமானது உலக வடிவமைப்பு நிறுவனத்துடன் நகரங்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது

  • பெங்களூரு பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் (BMRDA) அதிகார வரம்பிற்கு உட்பட்ட பிராந்திய பகுதிகளில் மேம்பாட்டினை ஏற்படுத்தி தலைநகருக்கு புதிய உலக தரத்திலான வடிவத்தை வழங்குவதற்காக பெங்களூரு குடிமை அமைப்பும் கர்நாடக அரசாங்கமும் ஜூலை 24 அன்று உலக வடிவமைப்பு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • பெங்களூருவில் இந்த திட்டமானது வெற்றி பெற்ற பிறகு கர்நாடகாவின் மற்ற பகுதிகளிலும் இதன் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

நியமனங்கள்

நீதியரசர் தேவேந்திர குமார் உபாத்யா பம்பாய் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • நீதியரசர் தேவேந்திர குமார் உபாத்யா பம்பாய் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜூலை 25 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பம்பாய் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளுள் ஒருவரான நீதியரசர் நிதின் ஜம்தார், மூன்று நாட்கள் பதவி வகித்து மே மாதம்  தலைமை நீதிபதி ஆர்.டி.தனுகா ஓய்வுபெற்றதிலிருந்து, தற்காலிக தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவருக்கு பின் உபாத்யா பம்பாய் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதியரசர் தீரஜ் சிங் தாகூர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • நீதியரசர் தீரஜ் சிங் தாக்கூரை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கும் ஆணைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஜூலை 25 2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தற்போது ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக உள்ள நீதியரசர் அகுல வெங்கட சேஷா சாய் அவர்களுக்கு பின் இவர் இந்த பதவிக்கு நியமிக்கபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விருதுகள்

ஆசியாவின் மிகவும் ஊக்கமளிக்கும் அமைப்பாக பிராண்ட் ஸ்டோரி நிறுவனமானதுஅமேடியஸ் ஆய்வகங்களைகுறிப்பிட்டுள்ளது.

  • கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்ப பயணத்தில் உள்ள அமேடியஸ் லேப்ஸ்ஆய்வகமானது ஆசியாவின் மிகவும் உத்வேகம் தரும் மற்றும் ஊக்கமளிக்கும் அமைப்பாக பிராண்ட் ஸ்டோரி நிறுவனத்தின் விருதை பெற்றுள்ளது
  • அமேடியஸ் லேப்ஸ் ஆய்வகமானது பெங்களூருவை சார்ந்த உலகளவில் இரண்டாவது பெரிய மற்றும் அதிநவீன பொறியியல் தளமாகும். அதன் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் தனது சீரிய வெளிப்பாடுகளுக்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

கர்மன் கவுர் தனது இரண்டாவது ITF W60 பட்டத்தை வென்றுள்ளார்.

  • இந்திய வீரரான கர்மன் கவுர் தண்டி, அமெரிக்காவில் நடைபெற்ற எவன்ஸ்வில்லி போட்டியில் ஜூலை 2023 இல் வெற்றி பெற்றதன் மூலம், தனது வாழ்க்கையின் இரண்டாவது W60 ITF” பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
  • ஜூலை 24 அன்று நடைபெற்ற ITF மகளிர் உலகச் சுற்றுப்பயணமான USD 60,000 இறுதி போட்டியில் கர்மன் 7-5 4-6 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், இந்திய வீராங்கனையான சானியா மிர்சாவுக்குப் பிறகு அமெரிக்காவில் சார்பு பட்டத்தை வென்ற ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையை கர்மன் பெற்றுள்ளார்.

முக்கிய தினம்

உலக கருவியலாளர் தினம் 2023

  • கருவியலாளர்கள் மற்றும் இன்விட்ரோ கருத்தரித்தல் (IVF) பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுவதும் உள்ள பொது மக்களுக்கு பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25 ஆம் நாளானது உலக கருவியலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது
  • கருவியலாளர்கள் என்பது மருத்துவ வல்லுநர்கள், கருமுட்டை மற்றும் கருவியல் பற்றி ஆய்வு மேற்கொள்பவர்கள் ஆகியோர் ஆவர். மேலும் இந்த தினமானது உலக IVF தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தினத்திற்கென்று எந்த ஒரு கருப்பொருளும் குறிப்பிடப்படவில்லை.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!