Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.417 முதலீடு செய்தால் ரூ.1 கோடி வரை ரிட்டன்ஸ்!

0
Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் - தினசரி ரூ.417 முதலீடு செய்தால் ரூ.1 கோடி வரை ரிட்டன்ஸ்!
Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் - தினசரி ரூ.417 முதலீடு செய்தால் ரூ.1 கோடி வரை ரிட்டன்ஸ்!
Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.417 முதலீடு செய்தால் ரூ.1 கோடி வரை ரிட்டன்ஸ்!

அஞ்சலகத்தின் சேமிப்பு திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தினமும் 417 ரூபாய் சேமிப்பதன் மூலம் 25 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் வரை நீங்கள் சேமிக்கலாம். மேலும் இத்திட்டம் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

சேமிப்பு திட்டம்:

தற்போது மக்கள் அதிக அளவில் சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் உள்ளது. இதனால் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் தொகை கிடைக்கும். ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக முதலீடு திட்டங்கள் சிறந்த நண்மைகளை அளிக்கிறது. அந்த வகையில் செல்வ மகள் சேமிப்பு திட்டம், காப்பீடு போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வருங்கால வைப்பு நிதி திட்டமும் உள்ளது. இந்த திட்டம் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை தருகிறது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!

இந்த திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் ஆகும். தினமும் 417 ரூபாய் சேமிப்பதன் மூலம் மாதம் 12500 ரூபாய் முதலீடு செய்து ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை சேமிக்கலாம். இந்த சேமிப்பு 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் மொத்தம் 22.50 லட்சம் ரூபாய் வரை உங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் உங்கள் முதலீட்டு தொகைக்கு 7.1 சதவீத படி 18.18 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. இவை சேர்ந்தது 40.68 லட்சம் ரூபாய் முதிர்வு காலத்தில் பாலிசிதாரருக்கு கிடைக்கும். தேவைப்பட்டால் 5 ஆண்டுகளாக நீங்கள் நீட்டிக்கலாம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி (DA) உயர்வுடன் பொங்கல் போனஸ் – முதல்வர் அறிவிப்பு!

அவ்வாறு நீடித்தால் முதலீடு செய்த மொத்த தொகை 37.50 லட்சமாக இருக்கும் வட்டியுடன் சேர்த்து 65.68 லட்சம் ரூபாய் கிடைக்கும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மொத்தம் 25 ஆண்டு முதலீடு செய்தால், உங்கள் கைக்கு 1.03 கோடி ரூபாய் வரை உங்களுக்கு கிடைக்கிறது. இந்த பிஎப் கணக்கை இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த சேமிப்பு கணக்கில் ஜாயின்ட் அக்கவுண்ட் வசதி கிடையாது. அஞ்சலகத்தில் வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்க அடையாள சான்று, முகவரி சான்று பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்கள் தேவை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!