புதிதாக 2423 காவலர்கள் நியமனம்- தமிழக காவல் துறை அறிவிப்பு!!!

0
புதிதாக 2423 காவலர்கள் நியமனம்- தமிழக காவல் துறை அறிவிப்பு
புதிதாக 2423 காவலர்கள் நியமனம்- தமிழக காவல் துறை அறிவிப்பு
புதிதாக 2423 காவலர்கள் நியமனம்- தமிழக காவல் துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் நிலையில் தற்போது காவல்துறையில் பயிற்சி முடித்த 2423 காவலர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிதாக காவலர்கள் நியமனம்:

காவல்துறை என்பது ஒரு மாகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில் காவலர்கள் தேர்வு செய்ய தேர்வு நடத்தியது.

இதன்படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகுழுமம், தமிழக காவல்துறையின் ஆயுதப்படைக்கு 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு 5,962 இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறை காவலர்கள் 208, தீயணைப்பு படை வீரர் 191 என 8826 பணியிடங்களும் என மொத்தம் 8888 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி நடத்தியது.

இந்த தேர்வை 3.22 லட்சம் பேர் எழுதிய நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு பெற்ற 2,465 பேருக்கு தமிழகத்தின் பயிற்சி பிரிவின் கீழ் இயங்கும் காவலர் பயிற்சி பள்ளிகள் மூலம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன.இப்பயிற்சிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் 2243 காவலர்களை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி கடந்த திங்கள் அன்று உத்தரவிட்டார்.

ரூ.3000/- ஊக்கத்தொகையுடன் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் 2,423 காவலர்களும் ஜனவரி 2-ஆம் தேதி ஆயுதப்படை பணியில் சேர்ந்துவிட வேண்டும் என டிஜிபி ஜே.கே.திரிபாதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி சென்னை பெருநகர காவல்துறை ஆயுதப்படையில் 1609, திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படையில் 196, தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படையில் 145,திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் 278, நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் 15 காவலர்களும் சேருகின்றனர். இவர்கள் அனைவரையும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை காவல்துறை உயர் அதிகாரிகள் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!