24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையம் – சுகாதாரத்துறை அமைச்சரின் திட்டம்!
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தை திறந்து வைத்து அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
தடுப்பூசி மையம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 23ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் முடக்கி விடப்பட்டுள்ளது.
சென்னையில் ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் மின்தடை ஏற்படும் பகுதிகள் – அறிவிப்பு!
இந்நிலையில், இன்று சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழகத்தில் முதன் முறையாக 24 மணி நேரம் இயங்கும் கொரோனா தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கல்லூரி மருத்துவமனைகளிலும் திங்கட்கிழமை முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திட்டம் தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
மேலும்,தமிழகத்தில் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அரியலூரில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். புளியந்தோப்பு கே.பி பார்க் கட்டிடத்தில் கொரனோ நோயாளிகளை தங்க வைத்ததால்தான் கட்டிடம் பலவீனமானது என்று கட்டுமான நிறுவனம் கூறியது தொடர்பான பதிலையும் அளித்தார்.