அரசு ஊழியர்களுக்கு 24 நாட்கள் விடுமுறை – மாநில அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியல்!

0
அரசு ஊழியர்களுக்கு 24 நாட்கள் விடுமுறை - மாநில அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியல்!
அரசு ஊழியர்களுக்கு 24 நாட்கள் விடுமுறை - மாநில அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியல்!
அரசு ஊழியர்களுக்கு 24 நாட்கள் விடுமுறை – மாநில அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியல்!

அனைத்து அரசுத்துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கும், வரும் 2022ம் ஆண்டிற்கான மாநில அரசின் பொது விடுமுறை பட்டியலை கர்நாடகா அரசு தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களின் கூடுதல் விவரங்களை குறித்து இப்பதிவில் காணலாம்.

விடுமுறை பட்டியல்

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் அடுத்து வரவிருக்கும் 2022ம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியலை அம்மாநில அரசு தற்சமயம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கர்நாடகா அரசுத்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழக்கமான விடுமுறை விடப்படுவது உண்டு.

தமிழகத்தில் டிசம்பர் மாதம் 132% க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்த விடுமுறை நாட்களை தவர மாநிலங்களுக்கான பிரத்தியேக விடுமுறைகள், பண்டிகை கால விடுமுறைகள், உள்ளூர் விடுமுறைகள், அரசு பொது விடுமுறைகள் அனைத்தும் கீழே உள்ள பட்டியலில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி,

15-1-2022: சனிக்கிழமை – உத்தராயண புனித வெள்ளி, மகர ராசி
26-1-2022: புதன்- குடியரசு தினம்
1-3-2022: செவ்வாய் – மகா சிவராத்திரி
2-4-2022: சனிக்கிழமை – உகாதி பண்டிகை
14-4-2022: வியாழன்- டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி
15-4-2022: வெள்ளி- புனித வெள்ளி
3-5-2022: செவ்வாய் – பசவேஸ்வர ஜெயந்தி / அக்ஷய மூன்றாம் நாள், குதுப்-ஏ-ரம்ஜான்
9-8-2022: புதன்- மொஹரம்
15-8-2022: திங்கள் – சுதந்திர தினம்
31-8-2022: புதன் – வாரிசித்தி விநாயக விரதம்
4-10-2022: செவ்வாய் – மகாநவமி, ஆயுத வழிபாடு
5-10-2022: புதன்- விஜயதசமி
24-10-2022: திங்கள் – குவார்ட்ஸ்
26-10-2022: புதன்- பலிபாட்யமி, தீபாவளி
1-11-2022: செவ்வாய் – கன்னட ராஜ்யோத்சவா
11-11-2022: வெள்ளி- கனகதாச ஜெயந்தி

சந்தியாவை பழிவாங்க நினைக்கும் சல்மா, சரவணனுக்கு தெரியாமல் குடும்பத்தை வரவழைக்க திட்டம் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

கர்நாடக மாநில அரசின் லிமிடெட் விடுமுறை நாட்களின் பட்டியல்:

இந்த விடுமுறை பட்டியலில் தொழிலாளர் தினம் (மே 1), பக்ரீத் (ஜூலை 10), மஹாளய அமாவாசை (செப்டம்பர் 25), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), மகரிஷி வால்மீகி ஜெயந்தி / ஈத் மிலாத் (அக்டோபர் 9) மற்றும் கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25) ) ஆகியவை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இஸ்லாமிய பண்டிகைகள் குறிப்பிட்ட தேதிக்கு பதிலாக வேறு நாளில் கொண்டாடப்பட்டால் அந்த விடுமுறைகளும் மாற்றி அளிக்கப்படலாம். மேலும் செப்டம்பர் 3ம் தேதி கைல் முஹூர்த்தம் மற்றும் டிசம்பர் 8ம் தேதியன்று குடகு மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!