நடப்பு நிகழ்வுகள் – 23 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 23 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 23 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 23 ஆகஸ்ட் 2023

தேசிய செய்திகள்

இந்திய குடியரசுத் தலைவர் திருமதி முர்மு தலைமையில் “அஸ்மிதா” என்ற முன்னெடுப்பானது தொடங்கப்பட்டுள்ளது.

  • ராணுவ வீர்களின் மனைவிகள் நல சங்கம் அமைப்பானது(AWWA) தேசிய தலைநகரான புது டெல்லியில் உள்ள மாபெரும் மானெக்ஷா மையத்தில் ‘அஸ்மிதா- ராணுவ மனைவிகளின் ஊக்கமளிக்கும் கதைகள்’ என்ற இரண்டாவது முன்னெடுப்பை ஏற்பாடு செய்துள்ளது. இதன் தலைமை மற்றும் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசு தலைவர் முர்மு உள்ளார்.
  • விடாமுயற்சி மற்றும் மனா உறுதியுடன், பல்வேறு துறைகளிலும் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கிக்கொண்ட ராணுவ வீரர்களின் மனைவிகளின் எழுச்சியூட்டும் வீர தீர கதைகளை பகிர்ந்து கொள்வதை நோக்கமாக கொண்டு இந்த முன்னெடுப்பானது தொடங்கப்பட்டுள்ளதாகும். இது ராணுவ வீரர்களின் துயர வாழ்க்கையினை மக்களின் கண்முன் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகும்.

சர்வதேச செய்திகள்

நேபாள புதிய தலைமை நீதிபதியாக பிஷோவம்பர் ஷ்ரேஸ்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • நேபாளத்தின் அடுத்த மற்றும் புதிய தலைமை நீதிபதியாக பிஷோவம்பர் பிரசாத் ஷ்ரேஸ்தா அவர்களை அந்நாட்டின் அதிபர் ராம் சந்திர பவுடல் ஆகஸ்ட் 21 அன்று நியமித்துள்ளார்.
  • ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஜனாதிபதி பவுடல் இமயமலை தேசம் என்றழைக்கப்படும் நேபாளத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக 14 மாதங்களுக்கு இவர் நீதித்துறை அமைப்பின் தலைவராக இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நாட்டின் உச்ச நீதிமன்றத்தை திறம்பட வழிநடத்தும் தனது திட்டங்களையும் தொலைநோக்கு பார்வைகளையும் முன்வைத்த ஸ்ரேஸ்தா, நீதிமன்ற நடைமுறைகளில் தற்போது நிகழும் இடைத்தரகர்களின் செல்வாக்கை ஒழிக்கப் பணியாற்றுவதாக உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2025 ஆம் ஆண்டிற்குள் FTAவை மறுபரிசீலனை செய்வதற்கான திட்டத்திற்கு இந்தியாவும் ஆசியான் அமைப்பும் ஒப்புக்கொள்கின்றன.

  • இந்தியாவும் ஆசியான் நாடுகளின் கூட்டமைப்பும் தற்போதைய தங்களின்  பொருட்களுக்கான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதையும், இருதரப்புகளுக்கான வர்த்தகத்தில் உள்ள “சமச்சீரற்ற தன்மையை” நிவர்த்தி செய்வதையும் நோக்கமாக கொண்டு மதிப்பாய்வை முடிப்பதற்கான 2025 இலக்கை நிர்ணயம் செய்யவும் முடிவு எடுத்துள்ளதாக தனது ஆகஸ்ட் 21 அன்று வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தோனேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இரு நாடுகளின் வழிகாட்டுதலுக்காக செப்டம்பர் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள இந்தியா-ஆசியான் தலைவர்கள் உச்சி மாநாட்டில் AITGA தரவு மதிப்பாய்வானது நன்முறையில் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான  AI-ஆற்றல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

  • சவூதி அரேபியா நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகமானது செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் அந்நாட்டின் பெரும்பரப்பை உள்ளடக்கிய பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடும் திட்டத்தைத் ஆகஸ்ட் 2023 இல் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பிராந்தியத்தில் தாவர உறைகளின் நிலையை ஆய்வு செய்வதையும் காடு வளர்ப்பு திட்டங்களின் இலக்குகளை மேம்படுத்துவதையும் இத்திட்டம் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பதை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகும். இது சவூதி அரேபியாவின் “கிரீன் சவுதி” முன்னெடுப்பு முயற்சி என்றும் அழைக்கப்படுகிறது.

மாநில செய்திகள்

முக்யமந்திரி சீகோ-காமோ யோஜனா திட்டத்தை MP முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

  • மத்தியப் பிரதேச  மாநிலத்தில்  ‘முதலமைச்சரின் கற்றல்-சம்பாதித்தல்’ என்று பொருள்பட கூடிய முக்யமந்திரி சீகோ-காமாவோ யோஜனா என்ற திட்டமானது ஆகஸ்ட் 22 அன்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தொடங்கி வைத்துள்ளார்.
  • இதன் முதல் கட்டமாக “ஒரு லட்சம் இளைஞர்களை” இத்திட்டத்தில் சேர்க்க அம்மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அடுத்தகட்டத்தில் இதன் மேம்பாடுகளை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறிப்பாக 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் ‘மேரா பில்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகஸ்ட் 21 அன்று ‘பில் லியாவோ இனாம் பாவோ’ (பில் கொண்டு வாருங்கள், வெகுமதியை பெறுங்கள்) என்ற முக்கிய திட்டத்தின் கீழ் ‘மேரா பில்’ என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • ஜிஎஸ்டி வரியின் கீழ் இணக்கத்தை அதிகரிப்பதையும் அதன் மூலம் நாட்டின் வருவாயை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
  • மேலும் இந்த திட்டமானது மாநில நுகர்வோர்கள் மாநிலத்திற்குள் செய்யப்படும் கொள்முதல்களுக்கான பில் பட்டியல்களை விற்பனையாளர்களிடமிருந்து பெறும் நடைமுறையை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையானது அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளதாக கர்நாடகா அறிவித்துள்ளது.

  • தேசிய கல்விக் கொள்கையை(NEP) திருப்பி எடுத்து கொள்வதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் புதியதாக அமல்படுத்தப்படும் மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிடுவதாகவும் கர்நாடக மாநில அரசாங்கமானது ஆகஸ்ட் 21 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • இந்த கொள்கையானது மாநிலங்களின் நம்பிக்கையை எடுத்துக்கொள்ளாமல் உருவாக்கப்பட்டது என்றும் கல்விக் கொள்கையை மாநிலங்களின் மீது திணிக்க முடியாது என்றும் பலதரப்பட்ட, பன்மை தன்மை கொண்ட நாடுகளில் ஒரே மாதிரியான கொள்கை சாத்தியமில்லை என்றும் அவர் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் ஏற்கனவே NEP கொள்கையை நிராகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

873 கோடி மதிப்பிலான பல்வேறு தொழில் மேம்பாடு திட்டங்களுக்கு ஒடிசா மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

  • ஒடிசா மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி மேம்பாடுகளுக்காக ரூ.873.57 கோடி மதிப்பிலான கிட்டதட்ட ஒன்பது தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களுக்கு அம்மாநில அரசாங்கமானது ஆகஸ்ட் 21 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த திட்டங்களின் மூலம் கிட்டத்தட்ட 2,51,600 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என அம்மாநில அரசாங்கமானது தெரிவித்துள்ளது. இந்த திட்டங்களில் பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட்டின் சுருக்கப்பட்ட கரிம உர ஆலை மற்றும் உயிர் வாயு ஆலை திட்டமானது முக்கியமாக பார்க்கப்படுகிறது. 33,065 மெட்ரிக் டன் ஆண்டுத் திறன் கொண்ட இந்தத் திட்டமானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் இரசாயன உற்பத்தியின் இரட்டை நன்மையை உறுதியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான புதிய விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை உத்திர பிரதேச மாநில முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கான புதிய விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகஸ்ட் 21 அன்று தொடங்கி வைத்துள்ளார்.
  • அம்மாநில தலைநகரமான லக்னோவில் நடைபெற்ற இந்த திட்ட அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர், ரூ.40 லட்சத்துக்கும் குறைவான விற்றுமுதலும் ரூ.5 கோடிக்கும் குறைவான மூலதனமும் கொண்ட அம்மாநிலத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 90 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசின் தொழில் முனைவோர் வலைதளத்தில் இதற்காக பதிவு செய்யுமாறு அவர் தொழில்முனைவோரை வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

G20 நான்காவது கலாச்சார பணிக்குழு(CWG) மாநாடானது வாரணாசியில் நடத்த திட்டம்.

  • G20 4வது கலாச்சார பணிக்குழு(CWG) கூட்டமானது உத்திர பிரதேசத்தின் வாரணாசியில் ஆகஸ்ட் 23 அன்று தொடங்க உள்ளது. இந்த மாநாடானது ஆகஸ்ட் 23 இல் தொடங்கி ஆகஸ்ட் 26 இல் முடிவடைகிறது. 
  • “G20 கலாச்சாரம்: பாரம்பரியம் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உலகளாவிய கதையை வடிவமைத்தல்” என்ற தலைப்பினை கருப்பொருளாக கொண்டு இந்த மாநாடானது நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாட்டின் பண்பு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடைபெற உள்ளது.

நியமனங்கள்

இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பின்(UIDAI) பகுதி நேரத் தலைவராக நீலகந்த் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ஆக்சிஸ் கேபிட்டலின் குளோபல் மேலாண்மை அமைப்பின் தலைவரும் ஆக்சிஸ் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணருமான நீலகந்த் மிஸ்ரா, இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பின்(UIDAI) பகுதி-நேரத் தலைவராக ஆகஸ்ட் 2023 இல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் இதற்கு முன்பு சுவிட்சர்லாந்தின் சூரிச் சார்ந்த கிரெடிட் சூயிஸுடன் முன்னணி பதவி வகித்தவர் என்றும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நிதி நிபுணத்துவ அனுபவம் கொண்ட இவர் இந்த நியமனத்தின் மூலம் நிறுவனத்தை மேம்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடக் நிறுவனத்தின் வணிகத்திற்கான தலைமை முதலீட்டு ஆலோசகராக ஜிதேந்திர கோஹில் நியமனம்.

  • கோடக் ஆல்டர்நேட் அசெட் மேனேஜர்ஸ் நிறுவனமானது(KAAML) நிறுவன முதலீட்டு வாணிபத்தின் ஆலோசனை நடைமுறையை மேம்படுத்துவதற்காக பொருளாதார நிபுணரான ஜிதேந்திர கோஹிலை அதன் தலைமை முதலீட்டு ஆலோசகராக நியமித்துள்ளதாக தனது ஆகஸ்ட் 2023 அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 
  • ஜிதேந்திரா KAAML இன் முதலீட்டு ஆலோசனைக் குழுவின் முக்கிய உறுப்பினராக, தனது சிறப்பான அனுபவங்கள் மூலம் நிறுவன பொருளாதார நெருக்கடியை சமன் செய்து நிறுவனத்தை மேம்படுத்துவார் என அந்நிறுவனம் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

விருதுகள்

THDC இந்தியா நிறுவனத்திற்கு மதிப்புமிக்க CSR டைம்ஸ் விருதானது வழங்கப்பட்டுள்ளது.

  • ‘தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை’ என்ற பிரிவில் கவனம் செலுத்துவதில் தனது தனித்துவமான பங்களிப்புகள் மற்றும் சிறந்த சாதனைகளுக்காக அந்நிறுவனத்திற்கு மதிப்புமிக்க “CSR டைம்ஸ் விருது” ஆனது ஆகஸ்ட் 2023 இல் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த மதிப்புமிக்க விருதை அந்நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான R. K. விஷ்னோய் பெற்றுகொண்டார் என அந்நிறுவனம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. “வளரும் பொருளாதாரத்தில் CSR மூலம் SDG களை மேம்பாடு அடைதல்: G20 நாடுகளின் பங்கு” என்ற கருப்பொருளில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சல்லு ஜிண்டால் அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க CSR TIMES வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.

  • புகழ்பெற்ற சமூக ஆர்வலரும், JSPஅறக்கட்டளையின் தலைவருமான ஷாலு ஜிண்டால், 2023 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க CSR TIMES வாழ்நாள் சாதனையாளர் விருதை ஆகஸ்ட் 2023 இல் வென்றுள்ளார்.
  • பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மற்றும் சமூக ரீதியாக பாதிக்கப்படக்கூடிய சமூக வளர்ச்சி மேம்பாட்டிற்கான அவரது சிறந்த மற்றும் நீடித்த நேர்மறையான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொருளாதார செய்திகள் 

2023 இல் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகமானது 800 பில்லியன் டாலர்களைக் தாண்டியுள்ளது : GTRI அறிக்கை.

  • இந்தியாவின் பணி மற்றும் சேவைப் பிரிவுகளின் ஆரோக்கியமான வளர்ச்சியானது, 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில்(ஜனவரி – ஜூன்), உலகளாவிய தேவையில் மந்தநிலை நிலவிய போதிலும், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிகளின் ஒட்டுமொத்த மதிப்பானது 800 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது என்று ஆகஸ்ட் 21 2023 அன்று GTRI அமைப்பானது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி என்ற அமைப்பின்(GTRI) பகுப்பாய்வின்படி, ஜனவரி-ஜூன் வரையிலான 2022 ஆம் ஆண்டிற்கான 379.5 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து, இந்த ஆண்டு ஜனவரி-ஜூன் வரையிலான காலத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி 1.5 சதவீதம் அதிகரித்து 385.4 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

கருப்பு ரிப்பன் தினம் 2023

  • சர்வாதிகாரதன்மை மற்றும் சர்வாதிகார ஆட்சிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் அவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 ஆம் நாளானது கருப்பு ரிப்பன் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வமாக நாசிசம் மற்றும் ஸ்ராலினிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐரோப்பியவின் நினைவு தினமாக இது அமைகிறது.

மெட்ராஸ் தினம் 

  • 1639 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மெட்ராஸ் என்ற மாநகராமனது நிறுவப்பட்டதைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் நாளானது “மெட்ராஸ் தினமாக” அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டானது இந்நகரம் நிறுவப்பட்ட 384 வது ஆண்டு நிறைவைக் குறிப்பதாக அமைகிறது. மேலும் 2004 ஆம் ஆண்டு அப்பிராந்தியத்தை சேர்ந்த ஒரு சிறிய குழுவினரின் முயற்சியால் மெட்ராஸ் தினம் கொண்டாடத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!