பணியாளர்களுக்கு 2022 வருடத்திற்கான தொடர் விடுமுறை நாட்கள் – முழு விபரங்கள் இதோ!

0
பணியாளர்களுக்கு 2022 வருடத்திற்கான தொடர் விடுமுறை நாட்கள் - முழு விபரங்கள் இதோ!
பணியாளர்களுக்கு 2022 வருடத்திற்கான தொடர் விடுமுறை நாட்கள் - முழு விபரங்கள் இதோ!
பணியாளர்களுக்கு 2022 வருடத்திற்கான தொடர் விடுமுறை நாட்கள் – முழு விபரங்கள் இதோ!

ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் போது நம்மில் பெரும்பாலானோர் மாதந்தோறும் வரும் தொடர் விடுமுறை நாட்களை கணக்கிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தொடர் விடுமுறை நாட்கள் குறித்த விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

தொடர் விடுமுறை:

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோர் ஒவ்வொரு மாதத்தின் விடுமுறை நாட்களை கணக்கிடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக தொடர் விடுமுறை நாட்கள் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பதும் வழக்கமான ஒன்று ஆகும். அவ்வாறு தொடர் விடுமுறை நாட்கள் வராமல் இடைப்பட்ட நாட்களில் மட்டும் விடுமுறை வந்தால் வேலைநாட்களில் விடுப்பு எடுத்து தொடர் விடுமுறையில் ஓய்வு அல்லது சுற்றுலா செல்வது சிலரின் பழக்கமாக இருந்து வருகிறது.

மாநிலம் முழுவதும் பள்ளிகள் 33% திறனுடன் மீண்டும் திறப்பு? அரசு முடிவு!

அதாவது திங்கட்கிழமை வேலைநாளாக இருந்து செவ்வாய் கிழமை விடுமுறை நாளாக இருந்தால் திங்கட்கிழமை விடுப்பு எடுத்து சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என 4 நாட்கள் தொடர் விடுமுறையில் வேறு ஏதேனும் திட்டம் வைத்திருப்பார்கள். அவ்வாறு விடுமுறை வேண்டி காத்திருப்பவர்களுக்கு உதவும் வகையில் தொடர் விடுமுறை நாட்கள் குறித்த விபரங்களை இந்த பதிவில் பின்வருமாறு காணலாம். இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும்.

தொடர் விடுமுறை நாட்கள்:

1. ஜன.26 புதன்கிழமை – குடியரசு தினவிழா என்பதால் 26 மற்றும் 27ம் தேதிகளில் விடுப்பு எடுத்தால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

2. மார்ச் 1 செவ்வாய்க்கிழமை – மகா சிவராத்திரி என்பதால் திங்கட்கிழமை விடுப்பு எடுத்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

3. மார்ச் 18 வெள்ளிக்கிழமை – ஹோலி பண்டிகை என்பதால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

4. ஏப்ரல் 14 வியாழன் – மகாவீரர் ஜெயந்தி, ஏப்ரல் 15 வெள்ளி – புனித வெள்ளி என்பதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

5. மே 3 செவ்வாய் கிழமை – நோன்பு நாள் என்பதால் திங்கட்கிழமை விடுப்பு எடுத்தால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

6. மே 16 திங்கட்கிழமை – பூத்த பூர்ணிமா சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

7. ஆக.8 திங்கட்கிழமை – மொஹரம்பண்டிகை சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

8. ஆக.11 வியாழக்கிழமை – ரக்ஷபந்தன் என்பதால் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்தால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

9. ஆக.15 திங்கட்கிழமை – சுதந்திரதினம் என்பதால் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

10. ஆக.19 வெள்ளிக்கிழமை – ஜன்மாஸ்டமி என்பதால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுஎன 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

11. ஆக.31 புதன்கிழமை – விநாயகர் சதூர்த்தி என்பதால் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை விடுப்பு எடுத்தால் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!