2021 FIFA வின் சிறந்த வீரர் விருதை பெற்றார் லெவன்டோவ்ஸ்கி – ரசிகர்கள் உற்சாகம்!

0
2021 FIFA வின் சிறந்த வீரர் விருதை பெற்றார் லெவன்டோவ்ஸ்கி - ரசிகர்கள் உற்சாகம்!
2021 FIFA வின் சிறந்த வீரர் விருதை பெற்றார் லெவன்டோவ்ஸ்கி - ரசிகர்கள் உற்சாகம்!
2021 FIFA வின் சிறந்த வீரர் விருதை பெற்றார் லெவன்டோவ்ஸ்கி – ரசிகர்கள் உற்சாகம்!

FIFA வின் 2021 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை போலிஷ் நாட்டை சேர்ந்த ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி வென்றுள்ளார். இதனால் லெவன்டோவ்ஸ்கி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

FIFA விருது:

ஜனவரி 17 ஆம் தேதி FIFA வின் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. அதில் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி உலகின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விருதுக்கான வாக்கு சேகரிப்பு கடந்த ஆண்டு இறுதி மாதம் வரை நடைபெற்ற நிலையில் தற்போது இறுதியாக போலிஷ் நாட்டை சேர்ந்த ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி தேர்வாகி விருதினை வென்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு FIFA வின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை மெஸ்ஸி கைப்பற்றினார். தற்போது வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படையில் மெஸ்ஸி 2 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

TN TRB காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – முதுநிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு!

நேற்று விருது பெற்ற பின் போட்டியாளர்களை சந்தித்த லெவன்டோவ்ஸ்கி பன்டெஸ்லிகாவில் இவ்வளவு கோல்களை அடிப்பது சாத்தியமில்லை எனவும் சில ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியமா என்று நீங்கள் என்னிடம் கேட்டால் நான் சிரித்திருப்பேன் என்று கூறினார். இந்த ஆண்டு பன்டெஸ்லிகாவில் அதிக கோல்கள் அடித்தது பெருமையாக உள்ளதாக தெரிவித்தார். 2020 ஆண்டில் பேயர்னுக்காக 41 கோல்களையும், 2021 ஆண்டில் 43 கோல்களையும் அடித்துள்ளார். இதன் மூலம் இரண்டு பன்டெஸ்லிகா சாதனைகளை முறியடித்துள்ளார்.

Post Office இன் கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டம் – வெறும் ரூ.1515 முதலீட்டில் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ்!

பெண்கள் சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை அலெக்ஸியா புட்டெல்லாஸ் பெற்று அசத்தி உள்ளார். மேலும் தாமஸ் டுச்செல் மற்றும் எம்மா ஹேய்ஸ் தலைமையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இதனால் இருவருக்கும் சிறந்த பயிற்சியாளர் விருது கிடைத்தது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!