விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ நடிகை ஆலியா மானஸா வீட்டில் நடந்த 2 கொண்டாட்டங்கள் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'ராஜா ராணி 2' நடிகை ஆலியா மானஸா வீட்டில் நடந்த 2 கொண்டாட்டங்கள் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'ராஜா ராணி 2' நடிகை ஆலியா மானஸா வீட்டில் நடந்த 2 கொண்டாட்டங்கள் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ நடிகை ஆலியா மானஸா வீட்டில் நடந்த 2 கொண்டாட்டங்கள் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வந்த நடிகை ஆலியா மானஸாவின் மகள் ஐலாவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றிருந்த அதே நாளில் ஆலியாவுக்கும் வளைகாப்பு நிகழ்வு நடந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆலியா மானஸா

கடந்த ஒரு சில நாட்களாக சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்க கூடிய ஒரு முக்கியமான விஷயம் பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை ஆலியா மானஸாவின் வளைகாப்பு நிகழ்வு தான். பொதுவாக சினிமா அல்லது சின்னத்திரையில் உச்சத்தில் இருக்கும் கால கட்டத்தில் எந்தவொரு நடிகையும் திருமணம் செய்துகொள்ளவோ, குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு நடிகைகளின் மார்க்கெட் திருமணத்திற்கு பிறகு குறைந்து விடும் என்ற பரவலான கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகிறது.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ பிரபலங்களின் டாப் 5 லிஸ்ட் – பிரியங்காவை முந்திய புகழ்!

ஆனால் இப்போதுள்ள கால கட்டங்களில் சீரியல் மற்றும் சினிமா நடிகைகள் பலரும் திருமணம் செய்து கொண்டு, குழந்தை பிறப்பிற்கு பின்பாக கூட நடித்து வருகின்றனர். இந்த பட்டியலில் நடிகை சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோரை சொல்லலாம். இதில் சின்னத்திரையை பற்றி பேசும் போது, சீரியலில் நடித்து உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் தன்னுடன் நடித்திருந்த நடிகரை திருமணம் செய்து கொண்டு, குழந்தை பெற்றுக்கொண்டு மீண்டும் சீரியலில் கலக்கி வரும் நடிகை ஆலியா மானஸா ரசிகர்களின் பேவரிட்களில் ஒருவராக இருக்கிறார்.

விஜய் டிவியின் ‘ராஜா ராணி’ சீரியலில் அறிமுகமாகி நிஜ கணவன், மனைவியாக மாறிய நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானஸா தம்பதிக்கு தற்போது ஐலா என்ற பெண் குழந்தை இருக்கிறது. அந்த வகையில் குழந்தை பிறப்பிற்கு பின்பாக மீண்டும் ‘ராஜா ராணி 2’ சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த நடிகை ஆலியா மானஸா இப்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். பிரசவ நேரத்தின் கடைசி சில நாட்கள் வரை இந்த சீரியலில் நடித்து கொடுத்திருக்கும் ஆலியா மானஸாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

ஏற்கனவே ஆலியா மானஸா மற்றும் சஞ்சீவ் அறிவித்தபடி, ஐலாவின் பிறந்த நாளன்று ஆலியா மானஸாவுக்கு வளைகாப்பு நடந்திருக்கிறது. இந்த நிகழ்வில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு ஆலியா மானஸா மற்றும் சஞ்சீவ் தம்பதிக்கு வாழ்த்துக்களை சொல்லி இருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதற்கிடையில் குழந்தை பிறந்து ஒரு சில மாதங்கள் கழித்து ஆலியா மானஸா மீண்டும் ‘ராஜா ராணி 2’ சந்தியாவாக களமிறங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!