தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக வருடந்தோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பேருந்துகள்:

நாடு முழுவதும் வரும் நவ.4ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா கால கட்டம் என்பதால் பண்டிகைகள் கொண்டாடப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு வெகுவிமர்சையாக கொண்டாட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதிக அளவிலான மக்கள் சொந்த ஊரிலிருந்து வெளியூர் சென்று வேலை பார்க்கின்றனர். அவர்கள் பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட விரும்புவார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 31% ஜூலை 1 முதல் அமல் – குஷியோ குஷி!

அதனால் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு செல்பவர்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதி போன்ற 6 இடங்களில் இருந்து நவ.1 முதல் 3ம் தேதி வரை ஏற்கனவே உள்ள பேருந்துகளோடு சேர்த்து மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று கூறப்பட்டுள்ளன. தீபாவளி முடிந்த பிறகு அவர்கள் திரும்பி வருவதற்கும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி – தேவசம் போர்டு அறிவிப்பு!

தீபாவளி முடிந்த பிறகு நவ.5 முதல் 8ம் தேதி வரை 17,719 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்து, ரயில், விமானம் என அனைத்திற்கும் முன்பதிவு நடைபெற்று வருகிறது. அவ்வாறு முன்பதிவு செய்யாதவர்களுக்கு பேருந்துகள் தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேருந்து வசதிகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதனால் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here