தமிழகத்தில் 15 காவல்துறை அதிகாரிகளுக்கான பதக்கங்கள் – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் 15 காவல்துறை அதிகாரிகளுக்கான பதக்கங்கள் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 15 காவல்துறை அதிகாரிகளுக்கான பதக்கங்கள் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 15 காவல்துறை அதிகாரிகளுக்கான பதக்கங்கள் – அரசு அறிவிப்பு!

நாளை நாட்டின் 75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தமிழக காவல்துறையை சேர்ந்த 15 அதிகாரிகளுக்கு காவல் பதக்கங்கள் வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகளுக்கான பதக்கங்கள்

நாட்டின் ஒவ்வொரு சுதந்திர தின விழாவும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுதந்திர தின விழாவை மிகவும் சிறப்பாக சிறப்பிக்கும் வகையில் பல ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. அரசு அலுவலகங்கள், நாட்டின் நினைவு சின்னங்கள், பிரபலமான இடங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் வண்ண வண்ண மின் விளக்குகளை கொண்டு அலங்கரித்து உள்ளனர்.

மெரினா கடற்கரையை அழகுபடுத்த நடவடிக்கை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

குறிப்பாக, பாரத பிரதமர் மோடி அவர்கள் ஆகஸ்ட் 13 ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைவரும் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும், இது போன்ற அரசு விழாக்களில், மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றும் அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்குவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச்சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகள் பெறுவோர்களுக்கு 8 கிராம் தங்கப்பதக்கமும், ரூ.25,000 பரிசும் வழங்கப்படும். குறிப்பாக, காவல்துறை அதிகாரிகள் 10 பேருக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!