இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவியது தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவும் விகிதம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் வார இறுதி நாட்களில் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்னும் 8 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள விடுமுறை நாட்கள்!

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28 முதல் 30 ஆம் தேதி மூன்று நாட்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது.

தமிழக தனியார் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்க அனுமதி – முக்கிய அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் மரியாதை செலுத்தும் நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள். அதை முன்னிட்டு இரண்டு நிகழ்ச்சியின் போது சட்டம் – ஒழுங்கை பராமரிக்கும் விதமாக இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் கூடுவது தடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!