சென்ட்ரல் வங்கியில் 115 காலிப்பணியிடங்கள் – விண்ணப்ப முறை, கட்டணம், தேர்வு முறை விளக்கம்!

0
சென்ட்ரல் வங்கியில் 115 காலிப்பணியிடங்கள் - விண்ணப்ப முறை, கட்டணம், தேர்வு முறை விளக்கம்!
சென்ட்ரல் வங்கியில் 115 காலிப்பணியிடங்கள் - விண்ணப்ப முறை, கட்டணம், தேர்வு முறை விளக்கம்!
சென்ட்ரல் வங்கியில் 115 காலிப்பணியிடங்கள் – விண்ணப்ப முறை, கட்டணம், தேர்வு முறை விளக்கம்!

மத்திய அரசு நடத்தி வரும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் சுமார் 115 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான விண்ணப்ப முறை, கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்பு

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் சுமார் 115 பணியிடங்களுக்கு தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியானது, பொருளாதார நிபுணர், தரவு விஞ்ஞானி, வருமான வரி அதிகாரி, சட்ட அதிகாரி, இடர் மேலாளர், தொழில்நுட்ப அதிகாரி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியிடங்கள் ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த அனைத்து பணியிடங்களுக்குமான ஆன்லைன் விண்ணப்பங்கள் நவம்பர் 23ம் தேதி முதல் தொடங்குவதாகவும், கடைசி தேதி டிசம்பர் 17 வரையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக L&T நிறுவனத்தில் 1100 பேருக்கு வேலைவாய்ப்பு – மிகப்பெரிய டேட்டா சென்டர்!

இப்போது இந்தப் பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான centralbankofindia.co.in மூலம் விண்ணப்ப பதிவுகளை செலுத்தும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2022 ஜனவரி 11க்குள் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களை பெறுவார்கள். ஆன்லைன் தேர்வு ஜனவரி 22 அன்று நடைபெறும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்தியா, நேபாளம் அல்லது பூட்டானின் குடிமகனாக இருக்க வேண்டும்.

Wipro நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

அதே போல இந்தியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்காக ஜனவரி 1, 1962க்கு முன் இந்தியாவுக்கு வந்த திபெத்திய அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பர்மா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா, உகாண்டா, ஜாம்பியா, மலாவி, ஜைர், எத்தியோப்பியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த எவரும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இப்போது விண்ணப்ப பதிவுகளை செலுத்த,

  • முதலில் இந்திய மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
  • அதன் முகப்புப் பக்கத்தில் CLICK HERE TO APPLY ONLINE என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்யவும்
  • விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
  • ஆவணங்களைப் பதிவேற்றவும்
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்
  • இந்த படிவத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

விண்ணப்பக் கட்டணங்கள்:

பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 850 மற்றும் GST செலுத்த வேண்டும். அதேசமயம் SC மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் ரூ. 175 மற்றும் GST தொகையை விண்ணப்பக் கட்டணமாக சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைமுறை:

நேர்காணலை தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.
ஒரு மணி நேரம் நீடிக்கும் தேர்வில் ஸ்ட்ரீம் வகை சார்ந்த கேள்விகள், கணினி அறிவு மற்றும் வங்கியியல், தற்போதைய பொருளாதார சூழ்நிலை மற்றும் பொது விழிப்புணர்வு ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
மும்பை, புனே, ராய்ப்பூர், போபால், சென்னை, சண்டிகர், டெல்லி, கவுகாத்தி, ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூரு, புவனேஷ்வர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் இந்த ஆன்லைன் தேர்வு ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.

விடைத்தாள் திருத்தும் முறை:

விடைத்தாளில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நான்கில் ஒரு பங்கு அல்லது கேள்விக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பெண்களில் 0.25 அபராதமாக கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பதாரர் கேள்வியை காலியாக விட்டுவிட்டால் மதிப்பெண்கள் குறைக்கப்படாது.

சம்பள விவரம்:

  • JMG ஸ்கேல் ஒன்றிற்கு ரூ.36,000 முதல் ரூ.63840 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • MMG ஸ்கேலுக்கு ரூ.48170 முதல் ரூ.69810 வரையும், MMG ஸ்கேல் மூன்றிற்கு ரூ.63840 முதல் ரூ.78230 வரை ஊதியம் வழங்கப்படும்.
  • MMG அளவுகோல் நான்குக்கு, சம்பளம் ரூ.76010 முதல் ரூ.89890 வரையிலும், TMG ஸ்கேல் ஐந்துக்கு ரூ.89890 முதல் ரூ.100350 வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!