TNPSC தேர்வாணையத்தில் 1087 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC தேர்வாணையத்தில் 1087 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC தேர்வாணையத்தில் 1087 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC தேர்வாணையத்தில் 1087 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் நில அளவையாளர், வரைவாளர்,உதவி வரைவாளர் பணியிடங்கள் உட்பட மொத்தம் 1089 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இது குறித்து விரிவான தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம்:

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு போட்டி தேர்வும் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நோய் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து விதமான போட்டி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. தற்போது டி.என்.பி.எஸ்.சி சார்பில் நில அளவையாளர், வரைவாளர், உதவி வரைவாளர் மொத்தம் 1089 பணிகளுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நில அளவையாளர் பணிக்கு 798 பேர், வரைவாளர் பணிக்கு 236 பேர், உதவி வரைவாளர் பணிக்கு 55 பேர் என மொத்தம் 1089 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Exams Daily Mobile App Download

மேலும் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ. 71,900 வரை இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நில அளவையாளர், வரைவாளர், உதவி வரைவாளர் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு வயது வரம்பு 32 க்குள் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ் டி, எம்பிசி/டிசி, பிசி(ஓபிசிஎம்) மற்றும் பிசிஎம், கணவனை இழந்த பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நில அளவையாளர் மற்றும் வரைவாளர் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட தொழில் துறைகளில் தேசிய தொழிற்பயிற்சி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Common Wealth Games 2022: 8வது நாளிற்கான போட்டிகள் – முழு பட்டியல் இதோ

இதே போல் உதவி வரைவாளர் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தொழிலாளர் அமைச்சகத்தின் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் டிராப்மென்ஷிப் (சிவில்) முடித்திருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 27ம் தேதி கடைசி நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ. 150 மற்றும் தேர்வுக்கான கட்டணம் ரூ.100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, கணவரை இழந்த பெண்களுக்கு கட்டணம் கிடையாது. மேலும் விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பங்களில் உள்ள திருத்தங்களை சரி செய்ய செப்டம்பர் 1 முதல் 3ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 06.11.2022 அன்று எழுத்து தேர்வுகள் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!