தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 புதிய பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

0
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 புதிய பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 புதிய பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 புதிய பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் வருவாய்த்துறையில் புதிதாக 108 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ.3.86 கோடி நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பணியிடங்கள்:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சட்டப்பேரவையில் அறிவித்தபடி வருவாய்த் துறையில் 108 புதிய பணியிடங்களை இந்து சமய அறநிலையத் துறையில் உருவாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் திருக்கோயில்களின் நிலங்கள் பல்வேறு தரப்பில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து எழுந்த புகாரின் பேரில் அதனை கண்டறிந்து சரிசெய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நாளை ஆய்வு – மத்தியகுழு இன்று வருகை!

அந்த வகையில் அறக்கட்டளைகள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான சொத்து விவரங்கள் தேசிய தகவல் தொகுப்பு மையம் மூலம் வருவாய்த்துறை நில ஆவணங்களோடு ஒப்பிட்டு சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் வருவாய்த்துறை சார்ந்து உள்ளதால் வருவாய்த் துறையுடன் இணைந்து பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் உதவி ஆணையர்களுடன் இணைந்து பணிபுரிய தாசில்தார் நிலையில் பணியாளரை நியமித்து இந்த பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சபரிமலை செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

அந்த வகையில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் மாவட்ட அளவிலான 36 உதவி ஆணையர் அலுவலகங்களிலும் பணிபுரிய 36 புதிய பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தாசில்தார், தட்டச்சர்கள், அலுவலக உதவியாளர்கள் என அனைத்து பதவிகளிலும் 36 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஊதிய செலவினம், தொடரா செலவினம் மற்றும் அலுவலக தளவாடங்கள் உள்ளிட்டவைகளுக்கு தமிழக அரசு ரூ.3.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!