தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது உறுதி – அமைச்சர் வாக்குறுதி!

0
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது உறுதி - அமைச்சர் வாக்குறுதி!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது உறுதி - அமைச்சர் வாக்குறுதி!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது உறுதி – அமைச்சர் வாக்குறுதி!

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய நகராட்சிகள் மற்றும் ஆலங்காயம், உதயேந்திரம் ஆகிய பேரூராட்சிகள் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்,அறிமுக கூட்டத்தில் பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு முக்கிய வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

ரூ.1000 வழங்கப்படுவது உறுதி:

தமிழகத்தில் கொரோனா 3வது அலையின் தாக்கம் குறைத்து வருவதால், ஊரடங்குகளில் கட்டுப்பாடுகள் அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு முதல்வர் வெளியிட்டார். அந்த வகையில் தமிழகத்தில் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது, அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநிலம் முழுவதும் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் பணிகள் பல்வேறு விதிமுறைகள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்

Wipro நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – உடனே விரையுங்கள்..!

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது அதேபோல் உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு கூட்டணி மற்றும் திமுக கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர், தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக நல்லிணக்க கூட்டணியை அமைத்து உள்ளார். அதனால் தான் நாம் எப்போதும் கூட்டணியில் இருக்கிறோம். இந்த கூட்டணி தர்மம் நிலைத்திருக்க தேர்தலில் நம் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் வெற்றி பெற வேண்டும்.

காவலர் ஆவது உங்கள் கனவா? CISF 1149 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதற்காக கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார். அதே போன்று வாணியம்பாடி நகராட்சி 36 வார்டு மற்றும் ஆலங்காயம் பேரூராட்சி 15 வார்டு சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அறிமுக ஆலோசனை கூட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றான ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேற்றபடும், எழுதி வைத்து கொள்ளுங்கள் அந்த பணத்தை வழங்குவோம் என வாக்குறுதி அளித்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!