காவலர் ஆவது உங்கள் கனவா? CISF 1149 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
காவலர் ஆவது உங்கள் கனவா? CISF 1149 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
காவலர் ஆவது உங்கள் கனவா? CISF 1149 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
காவலர் ஆவது உங்கள் கனவா? CISF 1149 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு (CISF) படையில் 1149 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் உள்ளது . தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறையும் , விண்ணப்பிக்கும் கடைசி தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு விவரம் இதோ:

மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு (CISF) படையில் 1149 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை நடத்தப்படுகிறது. இவற்றில் 489 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 249 இடங்கள் ஓபிசிக்கும், 113 இடங்கள் EWSக்கும், 161 இடங்கள் எஸ்சிக்கும், 137 இடங்கள் ST பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பீகார், ராஜஸ்தான், பஞ்சாப், சண்டிகர், ஹரியானா போன்ற நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதில் தமிழகத்தில் மட்டும் 41 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தின் இம்மாவட்டத்தில் பிப்ரவரி 19ம் தேதி விடுமுறை கிடையாது – அரசு அறிவிப்பு!

இந்த பணியிடங்களுக்கு உடற்தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ சோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 04.03.2022 அன்றைய நாளின் படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 23 வயதிற்குள் இருக்கும் ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு. மேலும் இப்பணிக்கு 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனை தொடர்ந்து உடற்தகுதிகளாக உயரம் – 170 செ.மீ மற்றும் மார்பளவு – 80 – 85 செ.மீ இருப்பது அவசியம்.

1 – 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 28 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – தேர்தல் எதிரொலி!

கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாத் தேர்வு (Objective Test) ஆக நடைபெறும். இந்த கொள்குறி வகை வினாத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு சம்பளமாக ரூ. 21,700 இருந்து 69,100 வழங்கபட உள்ளது. இப்பணிக்கு பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும் . மேலும் SC/ST மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் https://www.cisfrectt.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் மார்ச் 4 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!