தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட சம்பள உயர்வு – அமைச்சர் தகவல்!

1
தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட சம்பள உயர்வு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட சம்பள உயர்வு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட சம்பள உயர்வு – அமைச்சர் தகவல்!

தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் பெரிய கருப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

100 நாள் வேலைவாய்ப்பு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு ஒரு நிதி ஆண்டில் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. கொரோனா காரணமாக இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இந்திய அரசின், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசாங்கத்துடன் இணைந்து, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய விதி – விரிவான விளக்கம்!

கிராமப்புற இந்தியாவில், வறுமைக்கோட்டிற்கு கீழே வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் வாங்கும் திறனை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது. வயது வந்த கிராமப்புற நபர்கள், தங்கள் பெயர், வயது மற்றும் முகவரியை கிராம பஞ்சாயத்திடம், புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்தார், தகுந்த விசாரணைக்கு பின்னர், நபரை பதிவு செய்து, அவருக்கான, பணி அட்டையை வழங்குவார். பணி அட்டையில், நபரின் விவரங்கள், புகைப்படத்துடன் இடம் பெற்று இருக்கும். பதிவு செய்யப்படட் நபர், வேலைக்கான (குறைந்தது 14 நாட்களுக்கு தொடர்ந்து), விண்ணப்பத்தை அலுவலரிடமோ, கிராம ஊராட்சி அலுவலரிடமோ அளிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலமாக பணியாற்றுபவர்கள் முழுமையாக வேலையை செய்வதில்லை என்றும் வேலை செய்யாமலேயே சம்பளம் பெறுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் ஊழியர்களை கண்காணிக்க மொபைல் மானிட்டரிங் ஆப் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்திலும் இதுகுறித்து பல புகார்கள் எழுந்துள்ளன. இதனால் அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் தங்கள் பகுதி நலனுக்காக மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் ஊதியத்தை ரூ.273ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்த பரிசீலனை நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. இத்திட்டதால் பலமோசடிகள் நடக்கின்றன முறைகேடுகள் சம்பந்தமாக புகார் அளித்தால் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சாதகமாகவே அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள் எனவே தமிழகத்தின் அனைத்து ஊராட்சி களிலும் கைரேகைபதிவு வைத்தால் அரசுக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!