சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – ஒரே நாளில் 10,905 பேருக்கு அபராதம்!

0
சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - ஒரே நாளில் 10,905 பேருக்கு அபராதம்!
சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - ஒரே நாளில் 10,905 பேருக்கு அபராதம்!
சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – ஒரே நாளில் 10,905 பேருக்கு அபராதம்!

சென்னை சிக்னலில் விதி மீறுபவர்கள் நவீன கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நவீன கேமரா மூலம் ஒரே நாளில் விதிமீறிய 10,905 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் அதிக மக்கள் தொகையை கொண்ட மாநகரமாக காணப்படுகிறது சென்னை. இதன் காரணமாக தினசரி சாலை விபத்துகள் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் சிக்னல் அமைக்கப்பட்டு வருகிறது. இருந்தும் வாகன ஓட்டிகள் சிக்னலில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் சென்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணா நகர் ரவுண்டானா, சாந்தி காலனி, முகப்பேர், திருமங்கள உள்ளிட்ட 5 சிக்னலில் விதி மீறுபவர்களை கண்காணிக்க புதிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பூஜ்ஜிய மதிப்பெண்கள் – கல்வி வாரியம் விளக்கம்!

அதன்படி இந்த பகுதி சிக்னலில் நவீன கேமரா அமைக்கப்பட்டுள்ளது. சிக்னல் விதிகளை மீறுபவர்களுக்கு நவீன கேமரா மூலம் செலான் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை கடந்த ஜூலை 1ம் தேதி அன்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிலால் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நவீன கேமரா மூலம் ஒரே நாளில் 10,905 பேர் சிக்கியுள்ளனர். விதிமீறல் பற்றிய விளக்கத்தை வாகன ஓட்டிகள் 7 நாட்களுக்குள் தர வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இல்லையெனில் உரிமையாளர்களின் எண்ணிற்கு தானியங்கி மூலம் சலான் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பமானது சிக்னல்களில் விதிமுறைகளை மீறுபவர்கள் நம்பர் பிளேட்டை படம் பிடித்து சர்வருக்கு அனுப்பி அடுத்த 10 நொடியில் உரிமையாளரின் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here