அடுத்த 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி? முழு விவரம் இதோ!

0
அடுத்த 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் - எவற்றுக்கெல்லாம் அனுமதி? முழு விவரம் இதோ!
அடுத்த 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் - எவற்றுக்கெல்லாம் அனுமதி? முழு விவரம் இதோ!
அடுத்த 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி? முழு விவரம் இதோ!

திரிபுராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று வழக்குகளுக்கு மத்தியில் இன்று (ஜன.10) முதல் அடுத்த 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சில கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் எழுச்சி காரணமாக திரிபுரா அரசாங்கம் சில ஊரடங்கு கட்டுபாடுகளை அமல்படுத்தி இருக்கிறது. அதாவது திரிபுரா மாநில அரசு இன்று (ஜன.10) முதல் ஜனவரி 20ம் தேதி வரை தினசரி இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் ஜனவரி 18ம் தேதி பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!

இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தவிர, திரிபுரா மாநிலம் முழுவதும் சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், ஜனவரி 20 வரை மருத்துவக் கடைகள் முழு நேரமும் திறந்திருக்கும். திரைப்பட அரங்குகள், மல்டிபிளக்ஸ் காம்ப்ளெக்ஸ்கள், விளையாட்டு வளாகங்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் ஆகியவை 50 சதவீத திறனில் செயல்படும். உணவகங்கள் மற்றும் தாபாக்கள் 50 சதவீத திறனில் இயங்கும். மிகவும் பரவலான நிகழ்வுகளான கண்காட்சிகள் தடை செய்யப்படுகின்றன.

Post office இன் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

அதிகபட்சம் 100 பேருடன் திருமண நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படுகின்றன. இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது. மத வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி உண்டு. ஆனால் இந்த இடங்களில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர ஆப்லைன் பயிற்சி திட்டங்கள் நடத்தப்படக் கூடாது. பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!