Post office இன் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
Post office இன் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
Post office இன் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
Post office இன் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இத்திட்டங்களில் குறைந்த முதலீடு செலுத்துவதன் மூலமாக அதிக வட்டி தொகைகளை பெறலாம். தற்போது செல்வமகள் சேமிப்பு திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம்.

செல்வ மகள் சேமிப்பு திட்டம்

கொரோனா கால கட்டத்தில் பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலையை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். அதனால் பாதுகாப்பான முதலீட்டில் தங்கள் பணத்தை சேமிப்பை தொடங்கினர். வங்கிகளை காட்டிலும் அஞ்சல் அலுவலகத்தில் குறைந்த முதலீடு செய்வதன் மூலமாக அதிக வட்டி தொகைகளை பெற முடிகிறது. அதனால் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY) பெண் குழந்தைகளுக்காக சேமிக்கும் பெற்றோர்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டம் ஆகும்.

மதுரையில் நாளை (ஜனவரி 11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அத்துடன் ரெக்கரிங் டெபாசிட் திட்டம், பிபிஎஃப், செல்வ மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு ஆன்லைன் வழியாக மாத தொகை செலுத்த முடியும். செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயது நிரம்பிய குழந்தைகள் வரை சேமிப்பு கணக்கை தொடங்கலாம். மேலும் வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட கூடுதலாக வட்டி விகிதம் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கணக்கை தொடங்கியவர்கள் மாத தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்தி கொள்ளலாம். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்

1. முதலாவதாக IPPB மொபைல் பேங்கிங் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் 4 இலக்க MPINஐ உள்ளீட்டு கணக்கில் உள்நுழைய வேண்டும்.

2. இதில் ‘DOP சேவைகள்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் ‘சுகன்யா சம்ரித்தி கணக்கு’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

3. அடுத்ததாக SSA கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிட வேண்டும்.

4. அதற்கு அடுத்து வைப்புத் தொகையை கொடுத்து ‘பணம்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

5. இப்போது செலுத்த வேண்டிய பணத்தை உறுதி செய்து கொண்டு அதன்பின் ‘உறுதிப்படுத்து’ என்னும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

6. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP எண் அனுப்பப்படும். இந்த OTP எண்ணை உள்ளிட்டு அடுத்ததாக ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

7. இறுதியாக சேமிப்பு திட்டத்தில் செலுத்த வேண்டிய தங்களது மாத தொகை டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட்டது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!